நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் சிறப்பு வீடியோ காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் நாகப்பனிடம் கேட்கலாம்.
நடிகர் தனுஷின் புதிய படமான ‘குபேரா’ படத்தின் தலைப்பை, ஏற்கெனவே பதிவு செய்துள்ளதாக தெலுங்கு படத் தயாரிப்பாளர் புகார் தெரிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படத்தின் வெற்றிவிழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்காகத் தொடர்ந்து எட்டு மணி நேரம் உற்சாகத்துடன் டப்பிங் பேசிய நடிகர் கவுண்டமணி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தமிழ் சினிமாவில் தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ஆர்.கே.சுரேஷ் இந்தியாவில் எனக்கு தெரியாத அரசியல்வாதியே கிடையாது என பட விழாவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த தேசிங்கு ராஜா 2 படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த விழாவில், சாய் பல்லவி தனது குடும்பத்துடன் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.