சென்னை: வருமான வரித்துறை விசாரணைக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம்.
நடிகர் விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் டிடிஎஸ் தொகையை முறையாக செலுத்தவில்லை என்று புகார். இந்த புகாரை அடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை நடிகர் விஷால் ஆஜராகவில்லை.
இதனையடுத்து, வருமான வரித்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் பலமுறை நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியும், அவர் தரப்பில் இருந்து எந்தவித சரியான பதிலும் வரவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும், இதுவரை அவர் ஆஜராகவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது.
இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளி வர முடியாத கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.