ஜி.எஸ்.டி.யை அமுலுக்கு வந்த பின்பு திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்தது. அது மட்டுமில்லாமல் தமிழக அரசு 30% கேளிக்கை வரியையும் விதித்தது. இதனால் மளமளவென டிக்கெட் கட்டணம் உயந்தது. இந்த கட்டண உயர்வால் திரைத்துறையை சார்ந்தவர்கள் முகவும் பாதிப்படைவார்கள் என கூறி, திரைத்துறையை சார்ந்தவர்கள் அனைவரும் தமிழக அரசுடன் பேச்சுவாரத்தை நடத்தினர். இதன்மூலம் 30% கேளிக்கை வரியை 10% -ஆகா குறைத்தது. மேலும் கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கூறி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் கேளிக்கை வரியை 8% தமிழக அரசு குறைத்தது. அது மட்டுமில்லாமல் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்திக் கொள்ள அனுமதியும் வழங்கியது.
டிக்கெட் விலையை பார்ப்போம்:- (ஜி.எஸ்.டி. + கேளிக்கை வரி)
* மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக 204 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 63 ரூபாயுக்கும் டிக்கெட் விற்பனை செய்யலாம்.
* ஏசி திரையரங்குகளில் அதிகபட்சமாக 126 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 51 ரூபாய்க்கும் டிக்கெட் விற்பனை செய்யலாம்.
* ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்சமாக 101 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 38 ரூபாய்க்கும் டிக்கெட் விற்பனை செய்யலாம்.