‘குட் நைட்’ பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Good Night Meetha Ragunath Engagement: குட் நைட் படம் மூலம் பிரபலமான நாயகி மீதா ரகுநாத்திற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Nov 24, 2023, 08:06 PM IST
  • குட் நைட் படத்தில் நடித்து பிரபலமானவர் மீதா ரகுநாத்.
  • இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
  • மாப்பிள்ளை யார் தெரியுமா?
‘குட் நைட்’ பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?  title=

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் மீதா ரகுநாத்திற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. இவருக்கு யாருடன் நிச்சயம் நடந்தது தெரியுமா? 

குட் நைட் பட நாயகி..

புதுமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியாகியிருந்த படம், குட் நைட். இந்த படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருந்தார், இவருக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் அமைதியான, மிகவும் கூச்சப்படும் பெண்ணாக நடித்து பலரது மனங்கள் கவர்ந்தார். இப்படத்தில் இவரது பெயர் அனு. குட் நைட் படம் வெளியான பிறகு, “எனக்கும் அனு போல ஒரு பெண் வேண்டும்” என கூறி பல இளைஞர்கள் மீம்ஸ்களை கிரியேட் செய்தனர். இந்த படத்திற்கு பிறகு, மீதாவிற்கு தமிழ் படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தததாக கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம்..

மீதாவின் சொந்த ஊரான ஊட்டியில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. மீதா ரகுநாத், தனது வருங்கால கணவருடன் இருக்கும் சில புகைப்படங்களும் இவர் சிகப்பு நிற புடவையில் இருக்கும் போட்டோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இவரது ரசிகர்கள் பலரும் இந்த போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க | வைரலாகும் முன்னணி நடிகையின் சிறுவயது புகைப்படம்! யார் தெரியுமா?

மாப்பிள்ளை யார்? 

மீதா ரகுநாத் திருமணம் செய்து கொள்ள இருப்பவர், அவரது நீண்ட நாள் தோழர் எனவும், இவர்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னொரு பக்கத்தில் இந்த திருமணம் பெரியவர்களால் பார்த்து நிச்சயம் செய்து வைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இது தவிர, மீதா ரகுநாத் திருமணம் செய்து கொள்ள இருப்பவர் குறித்த வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. 

Meetha Ragunath

குட்நைட் படத்திற்கு முன்..

மீதா ரகுநாத், குட்நைட் படத்தில் நடிப்பதற்கு முன்னரே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்தார். 2022ஆம் ஆண்டு வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் கிஷன் தாஸிற்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது பெயர் ரகுநாத்தின் பெயர் ரேகா. இதில் ஸ்ட்ரைட் ஹேருடன் வரும் இவரை பார்த்த ரசிகர்கள் அப்போதே “யாருடா இந்த பொண்ணு..” என்று கவனக்கி ஆரம்பித்தனர். இதையடுத்து குட்நைட் படத்தில் சுருள் முடி தேவதையாக வந்த இவரை பலருக்கு அடையாளம் தெரியாமல் போனது. 

 மேலும் படிக்க | மீண்டும் வெளியாகிறது வீரப்பனின் டாக்குமெண்டரி! எந்த தளத்தில் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News