நாளை முதல் மக்களின் மனம் கவர்ந்த “குட் நைட்” படம் உங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்

Good Night OTT Released: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக, இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான “குட் நைட்” திரைப்படத்தை வழங்குகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 2, 2023, 04:12 PM IST
  • நடிகர் மணிகண்டனின் நடிப்பு திறனை பலரும் பாராட்டி வந்தனர்.
  • நாளை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும்.
  • இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
நாளை முதல் மக்களின் மனம் கவர்ந்த “குட் நைட்” படம் உங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் title=

குட்நைட் படத்தில் ஜெய்பீம் , விக்ரம் வேதா படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மணிகண்டன் மற்றும் இவருக்கு ஜோடியாக முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் பிரபல மடைந்த மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் - பக்ஸ், இயக்குனர் பாலாஜி சக்தி வேல், ரெபேக்கா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மில்லியன் டாலர் ஸ்டுடியோ தயாரிப்பில் விநாயக் சந்திரசேகரன் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அத்துடன் இந்த படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் குட் நைட் திரைப்படம் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நாளை அதாவது ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது. குறட்டை சத்தமும் அது சமூகத்தில் உண்டாக்கும் அதிர்வுகளையும் அதன் மீதான கருத்துக்களையும் அலசுகிறது இந்தப்படம். ஒருவனின் வாழ்க்கையையும் அதனால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், நகைச்சுவையுடன் அருமையான திரைக்கதையில் தந்துள்ளது இந்த திரைப்படம். 

மேலும் படிக்க | ‘என் கணவருக்கு யார் பதில் சொல்வது?’ முத்தக்காட்சியில் நடக்காதது குறித்து மனம் திறந்த பிரபல நடிகை..!

குறட்டை விடுவதால், அவதிப்படும் மணிகண்டனுக்கும் அவனின் மனைவியாக நடித்துள்ள மீதாவிற்க்கும் உள்ள உறவையும், குறட்டை அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் நகைச்சுவையுடன் அருமையான திரைக்கதையில் தந்துள்ளது இந்த திரைப்படம். 

மோகனின் குறட்டை சத்தம் அனுவை இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்கிறது. இறுதியில், தூக்கமின்மையால் அனுவின் உடல்நிலையைப் பாதிக்கப்படுகிறது, அதனால் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். மனைவியின் உடல்நிலையில் அக்கறை கொண்டு மோகன் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.

யதார்த்தமான வாழ்வியலை, நகைச்சுவை பொங்க, அருமையான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் அழகான படைப்பாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

நசரத் பாசிலியன், மகேஷ் ராஜ் பாசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டனின் அட்டகாசமான இசையும், ஜெயந்த் சேது மாதவனின் கண்கவர் ஒளிப்பதிவும் பலமாக அமைந்துள்ளன.

இந்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘குட் நைட்’ ஜூலை 3 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகயுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

மேலும் படிக்க | இறப்பதற்கு முன்பு கடைசி ஆசையை தெரிவித்த பிரபல நடிகை..! அப்படியென்ன ஆசை..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News