காலா குடும்பத்தில் இணைந்தார் ஹுமா குரேஷி!!

Last Updated : Jul 21, 2017, 12:19 PM IST
காலா குடும்பத்தில் இணைந்தார் ஹுமா குரேஷி!! title=

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் 'காலா'. இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடிகின்றார், மற்றொரு கதாபாத்திரத்தில்  பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ரஜினியை காதலிபவராக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். வொன்டர் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில்  சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டில், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சென்னைக்கு அருகில் ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில்,  செட் அமைத்து காலா படபிடிப்பு நடந்துவரும் இன்நிலையில் நேற்று முதல் ஷூட்டிங்கில் ஹுமா கலந்துகொண்டார். இவர் இப்படத்தில் பாலியல்  தொழிலாளியாக நடிப்பதகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் ஆகஸ்ட் இறுதிவரை சென்னையில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் ஏன கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது.

Trending News