இன்று நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆங்காங்கே பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. இதையொட்டி யோகா மீது அதீத ஆர்வம் கொண்ட பிரபலங்கள் சிலரை பார்க்கலாம் வாங்க.
சமந்தா:
சாகுந்தலம் நாயகி சமந்தா, கடந்த சில நாட்களாக தனது வாழ்க்கையில் பல கடினமான கட்டங்களை எதிர்கொண்டார். திருமண வாழ்க்கை, பட தோல்வி, ரசிகர்களின் ஆற்றாமை என பல வகையான பிரச்சனைகளை அவர் சந்தித்தார். இடையில் அவருக்கு தசைப்பிடிப்பு நோயான மயோசிடிஸ் தாக்கியது. இந்த அனைத்து கட்டத்திலும் அவர் விடாத ஒரே விஷயம், யோகா மற்றும் உடற்பயிற்சிதான். இன்று வரை இவை இரண்டையும் ஃபாலோ செய்யும் இவர் இதுதனது உடலுக்கு மனதுக்கும் மன அமைதி தருவது போல உணருவதாக அவ்வப்ப்டோது குறிப்பிட்டு வருகிறார்.
ரகுல் ப்ரீத் சிங்:
கோலிவுட்டில் மிகவும் ஃபிட்டாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவருக்கு விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, உடலுக்கு வேலை கொடுக்கும் வகையில் ஏதாவது செயலில் ஈடுபடுவது என்றால் மிகவும் பிடிக்கும். இவரது ஃபேவரட் உடற்பயிற்சிகளுள் ஒன்று, யோகா. இவருக்கு உத்தனாசனா பயிற்சி மிகவும் பிடிக்குமாம். இந்த பயிற்சிகளை செய்வது போல சில வீடியோ மற்றும் போட்டோக்களையும் அவர் சில வருடங்களுக்கு முன்னர் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்னர் மைனஸ் டிகிரி குளிரில் அவர் தன்ணீரில் இறங்கிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
அமலா பால்:
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை, அமலா பால். இவருக்கு உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் கை வந்த கலை. ட்ராப்சி யோகா எனப்படும் ஒரு வகை ஆசனத்தை அடிக்கடி செய்பவர் இவர். இதை, துணியால் கையிறு போல கட்டி செய்ய வேண்டும். இதற்கு உடலிலும் மனதிலும் உறுதி வேண்டும் என குறிப்பிடுகிறார் அமலா பால்.
பூஜா ஹெக்டே:
முகமூடி படம் மூலம் அறிமுகமாகி இன்று பாலிவுட் வரை ரீச் ஆகியுள்ள நடிகை, பூஜா ஹெக்டே. ஒல்லியான தேகத்துடனும் ஃபிட்டான உடலுடனும் வலம் வரும் இவர், தனது டயட் மற்றும் உடற்பயிற்சி விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்ய மாட்டாராம். இவர், யோகா செய்வதற்கென்று எந்த பயிற்சியாளரையும் வைத்துக்கொள்ளவில்லையாம். வீட்டிலேயே விதவிதமான யோகாசனங்களை செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார், பூஜா.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தற்போது தனது தந்தையை வைத்து லால் சலாம் என்ற படத்தினை இயக்கியுள்ளார். சில ஆண்டுகளாகவே, ஆன்மீகம், ஆத்மா, உடற்பயிற்சி என பல விஷயங்களை கையாண்டு வருகிறார் இவர். இவருக்கும் யோகா செய்வது கை வந்த கலையாம். ஒரு இயக்குநராக மட்டுமன்றி நடனம் ஆடுபவராகவும் ஃபிட்னஸ் ஃப்ரீக்காகவும் தன்னை மாற்றியுள்ளார் ஐஸ்வர்யா. இவருக்கு பிடித்த ஆசனம், சுப்தா வஜ்ராசனம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ