ஜேம்ஸ் பாண்ட் 007 படத்தின் ட்ரெய்லர் வெளியானது!! "நோ டைம் டு டை"

ஜேம்ஸ் பாண்ட் படம் 'நோ டைம் டு டை' டிரெய்லர் வெளியிடப்பட்டது. ஜேம்ஸ்பாண்டாக டேனியல் கிரெய்க் நடிக்கும் கடைசி படமாகும்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Dec 5, 2019, 04:31 PM IST
ஜேம்ஸ் பாண்ட் 007 படத்தின் ட்ரெய்லர் வெளியானது!! "நோ டைம் டு டை"
Pic Courtesy : Youtube Grab

புது டெல்லி: ஜேம்ஸ் பாண்ட், நோ டைம் டு டை என டேனியல் கிரெய்கின் கடைசி முயற்சியின் டிரெய்லர் வெளிவந்துள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வேற வெறும் நான்கு மாதங்களே உள்ளன, மேலும் 2015 ஆம் ஆண்டு வெளியான ஸ்பெக்டருக்குப் பிறகு, அவர்கள் சந்தித்த ஏமாற்றத்தைத் தொடர்ந்து, இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், ராமி மாலெக் முக்கிய வில்லனாக நடிக்கிறார். லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள்.

டேனியல் கிரெய்க் நான்கு முறை ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார். அதாவது கேசினோ ராயல், குவான்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதான் கடைசி என டேனியல் கிரெய்க் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக ஜேம்ஸ் பாண்டாக நடிக்க வேறு ஒருவரை தேர்வு செய்வார்கள்.

 

நோ டைம் டு டெய் படத்தை கேரி ஜோஜி இயக்குகிறார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், இன்று ட்ரைலர் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.