முதலில் ஜெயலலிதா, இப்போது இந்திரா காந்தி: அசத்தும் Kangana Ranaut

மறைந்த இந்தியப் பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா இந்திரா காந்தியாக நடிக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 29, 2021, 08:51 PM IST
  • இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா நடிக்கவுள்ளார்.
  • படத்திற்கான திரைக்கதை தயாராக உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • கங்கனா ரனாவத் தனது அச்சமற்ற பேச்சுகளுக்கும், தைரியமான நிலைபாடுகளுக்கும் அறியப்படுபவர்.
முதலில் ஜெயலலிதா, இப்போது இந்திரா காந்தி: அசத்தும் Kangana Ranaut title=

கங்கனா ரனாவத் ஒரு நடிகையாகவும் அவர் எடுக்கும் அரசியல் நிலைப்பாட்டிற்காகவும் தொடர்ந்து செய்திகளில் இருக்கிறார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் ‘தலைவி’ படத்தில் கங்கனா நடித்துள்ளார். இந்த ஆண்டு அகில இந்திய அளவில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் இதுவும் ஒன்றாகும். படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

மறைந்த இந்தியப் பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தியின் (Indira Gandhi) வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா இந்திரா காந்தியாக நடிக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது. இது குறித்து கூறிய கங்கணா, “ஆம், நாங்கள் இந்த படத்தின் பணிகளை துவக்கியுள்ளோம். படத்தின் ஸ்கிரிப்ட் இறுதி கட்டத்தில் உள்ளது. இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு அல்ல. இது ஒரு சிறந்த காவிய படம். துல்லியமாகச் சொல்வதானால், இது ஒரு அரசியல் நாடகம். தற்போதைய இந்தியாவின் சமூக-அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள இது எனது தலைமுறைக்கு உதவும்” என்றார்.

கங்கனா ரனாவத் (Kangana Ranaut) மேலும் கூறுகையில், "இந்திய அரசியல் வரலாற்றில் நாம் பெற்ற மிகச் சிறந்த தலைவியாக இருந்த இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆவலுடன் உள்ளேன். பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள்" என்றார்.

ALSO READ: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: Viral ஆகும் Aishwarya Rai புகைப்படம்

முன்னதாக "ரிவால்வர் ராணி" படத்தில் கங்கனாவுடன் பணிபுரிந்த இயக்குனர் சாய் கபீர் இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதி படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, மொரார்ஜி தேசாய், மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கதாப்பாத்திரங்களில் முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

படத்திற்கான திரைக்கதை தயாராக உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதில் கங்கனாவுக்கு தனி ஆர்வம் உள்ளது என்பது அவரது சமீபத்திய படத் தேர்வுகளிலிருந்து நன்றாக புரிகிறது. திரைத் துறையில் தனக்கென ஒரு தனி இடம் பதித்துள்ள கங்கனா ரனாவத் தனது அச்சமற்ற பேச்சுகளுக்கும், தைரியமான நிலைபாடுகளுக்கும் அறியப்படுபவர்.

ALSO READ: #KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News