கார்த்திகை தீபம்: பல்லவியுடன் வீட்டிற்கு வந்த கார்த்திக்.. அபிராமி எடுத்த முடிவு

Karthigai Deepam TV Serial Online: பல்லவியுடன் வீட்டிற்கு வந்த கார்த்திக்.. அபிராமி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 12, 2023, 12:57 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: பல்லவியுடன் வீட்டிற்கு வந்த கார்த்திக்.. அபிராமி எடுத்த முடிவு title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

பல்லவியுடன் வீட்டிற்கு வந்த கார்த்திக்.. அபிராமி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பல்லவியாக ஒரு பெண் கார்த்திக்கிடம் அறிமுகமாக தீபா உண்மையை சொல்லாமல் மறைத்து விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | 73 வயது... உலகத்திற்கே சூப்பர்ஸ்டார்.. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

அதாவது, தீபா ரூபஸ்ரீயிடம் அடுத்து என்ன செய்வது என பேசி விட்டு வீட்டிற்கு வர கார்த்திக் பல்லவியை கூட்டி கொண்டு வீட்டிற்கு வந்து எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறான். இந்த பொண்ணு ஏற்கனவே நம்ம வீட்டிற்கு வந்து பாடி இருக்கா என்று சொல்ல அபிராமி என்னப்பா சொல்ற, இவங்களை நான் பார்த்ததே இல்லையே என்று கேள்வி எழுப்புகிறாள். 

உடனே கார்த்திக் ரூபஸ்ரீ உண்மையாக பாடகி கிடையாது, அவங்களுக்காக இவங்க தான் குரல் கொடுத்துட்டு இருந்தாங்க என்று நடந்த விஷயங்கள் அனைத்தும் சொல்ல அபிராமி, அருணாச்சலம் ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். திரும்பவும் எதுக்கு இவங்களை இங்கே கூட்டிட்டு வந்த என்று கேட்க இவங்க தான் நமக்காக பாட போறாங்க, ரெக்கார்டிங் இருக்கு என்று சொல்ல அபிராமி எப்போ என்று கேட்கிறாள். 

கார்த்திக் நீங்களே நல்ல நாளா பார்த்து சொல்லுங்க என்று கேட்க புதன்கிழமை நல்ல நாள் தான் அன்னைக்கே வச்சிக்கலாம் என்று சொல்ல பல்லவி அதுக்கு ரெண்டு நாள் தான் இருக்கு, நான் ஊருக்கு போயிடு திரும்பி வருவது கஷ்டம், அதனால் எனக்கு தங்கிக்க இடம் ஏற்பாடு பண்ணி தாங்க, இந்த வீட்லயே கூட ஓரமாக இருந்துகிறேன் என்று சொல்கிறாள். 

ஆனால் கார்த்திக் ஹோட்டலில் ரூம் புக் பண்ணுவதாக சொல்ல அபிராமி வேண்டாம் இங்கயே தங்கட்டும் என்று சொல்லி விடுகிறாள். மேலும்  வீட்டில் ஒரு சிறிய பூஜை இருக்கு, அதுக்கு நீங்க தான் பாடணும் என பல்லவியை பாட சொல்கிறாள். அவளும் வேறு வழியின்றி பாட ஒப்பு கொள்கிறாள். பிறகு ஐஸ்வர்யா மற்றும் பல்லவி ரூமுக்குள் சந்திக்க நீ பெரிய ஆளா இருக்க என்று பல்லவியை பாராட்டுகிறாள். மேலும் நீ பாடும் போது கார்த்திக் இருக்க கூடாது அதுக்கு ஏதாவது பிளான் போடணும் என யோசித்து சிதம்பரத்துக்கு தகவல் கொடுக்கின்றனர். தீபாவும் மீனாட்சியும் நடப்பது புரியாமல் நிற்கின்றனர். 

மேலும் படிக்க | பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? இவர்தான் அடுத்த தொகுப்பாளர்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News