ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ஸ்டார்

நடிகர் கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 12, 2024, 03:24 PM IST
  • முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர்.
  • ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர்.
  • பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ஸ்டார் title=

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நடிகர் கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

ஸ்டார் படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இந்த படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர்.

எட்டு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உணர்வுபூர்வமான படத்தின் உச்சகட்ட காட்சி.. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர்.

மேலும் படிக்க | மதுரையில் பொளந்தெடுக்கும் கனமழை... சாலையில் தண்ணீர் அதிகமாக தேங்க என்ன காரணம்?

‘தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான (எட்டு நிமிடம் 21 வினாடி) கிளைமாக்ஸ் காட்சி இதுதான்’ என்று குறிப்பிட்டிருக்கும் படக்குழுவினர், இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும், இதனைக் குறிப்பிட்டு பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறும் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் படத்தை திரையிடும் திரையரங்குகளில் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ‘ஸ்டார்’ திரைப்படம் இன்று முதல் கூடுதலாக நூற்றெண்பது (180) திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் கவினின் நடிப்பையும், யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினர்.

இளன் இயக்கத்தில் கவின், லால், பிரீத்தி முகுந்தன் அதிதி பொஹங்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

நேற்று வெளியான ‘ஸ்டார்’ திரைப்படம்- பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் கோடை விடுமுறைக்கு குடும்பங்களுடன் திரையரங்கிற்கு வருகை தந்து ரசிக்கும் படைப்பாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ‘ஸ்டார்’ திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்து சினிமா ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும், திரையுலக வணிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஸ்டார் கதையின் கரு:
சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞன், கலை (கவின்). சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளரும் இவருக்கு வீட்டில் அப்பா, அக்கா சப்போர்ட், அம்மாவை தவிர. +2வில் ஜஸ்ட் பாஸ் வாங்குபவரையும் பிடித்து இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விட, தன் சினிமா கனவை துரத்தி பிடிக்க அவ்வப்போது பட ஆடீஷன்களில் கலந்து கொள்கிறார். எத்தனை தோல்வி வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு அடுத்ததை நோக்கி ஓடும் அவனுக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது.

அந்த விபத்தினால் அவன் கனவை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். ஆனால் அவனே விட்டு விலகினாலும், அவனை மீண்டும் மீண்டும் சினிமா கனவுகள் துரத்திக்கொண்டே இருக்கிறது. தன் ஆசையையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல், குடும்ப கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் அவன், ஒரு கட்டத்தில் தனக்கு பிடித்தவர்களையும் தன்னையும் வெறுக்க ஆரம்பிக்கிறான். இடையில் அவனுக்கு கல்லூரி பருவத்தில் ஒரு காதல், கல்லூரியை முடித்த அவனை தேடி வரும் ஒரு காதல் என இரண்டு அழகான காதல் கதைகள். தன்னை மாற்றிக்கொண்டு சாதாரண வேலைக்கு செல்லும் அவன், தான் மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்து, வெறுத்து, தன்னுடன் இருப்பவர்களை புறந்தள்ளி அன்புக்குரியவர்களின் வெறுப்பிற்கும் ஆளாகிறான். அவனுக்கு தேவையான வாய்ப்பு கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் நேரத்தில், அவன் மனைவிக்கு சீரியஸ் என போன் வருகிறது. அவன் சினிமாவை தேர்ந்தெடுத்தானா? தன் மனைவியை தேர்ந்தெடுத்தானா? ஸ்டார் படத்திற்கு சென்று பாருங்கள். 

மேலும் படிக்க | சென்னையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர்கள்! சிறுவன் உள்பட 3 பேர் கைது..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News