கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!!

Last Updated : Mar 9, 2020, 12:57 PM IST
கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தேசிய மகளிர் விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் சர்வதேச மகளிர் தினத்தன்று தனது நடிப்பில் வெளியாக இருக்கும் "மிஸ் இந்தியா" வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டரைப் பகிர்ந்து கொள்ள நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வரப்போகிறது என்பதை வெளிப்படுத்தினார்.

இப்படம் தெலுங்கில் தயாரிக்கப்படவுள்ளதுடன், ஜகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ், பானுஸ்ரீ மெஹ்ரா, பூஜிதா பொன்னடா, கமல் காமராஜு மற்றும் நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்த கீர்த்தி, 2020 ஆம் ஆண்டு மகளிர் தினத்தன்று தனது ரசிகர்களை வாழ்த்தி, "நாங்க இருக்குற இடத்தில்.. மேஜிக் நடக்கும்..! #MissIndia சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்" என்று எழுதினார். அந்த கிளாசிக்கான போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகையர் திலகமாக இருந்த கீர்த்தி சுரேஷ், தற்போது மிஸ் இந்தியாவாக மாறி உள்ளார். தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை ஒரே படத்தில் நடித்து, ஒட்டுமொத்தமாக வாங்கி குவித்த கீர்த்தி சுரேஷின் விருதுகள் வாங்கிய தருணங்களை அழகான மாஷ் அப்பாக செய்து அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர். 

 

More Stories

Trending News