வில்லியாக நடிக்கும் த்ரிஷா! சர்ச்சை இயக்குநருடன் கூட்டணி..யார் தெரியுமா?

Actress Trisha Villain Role : தமிழ் நடிகை த்ரிஷா, புதிதாக ஒரு படத்தில் வில்லியாக நடிக்கிறார். அது என்ன படம் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 24, 2024, 03:07 PM IST
  • வில்லனாக நடிக்கும் த்ரிஷா
  • சர்ச்சை இயக்குநருடன் கூட்டணி!
  • யார் தெரியுமா?
வில்லியாக நடிக்கும் த்ரிஷா! சர்ச்சை இயக்குநருடன் கூட்டணி..யார் தெரியுமா? title=

Actress Trisha Villain Role : கோலிவுட் திரையுலகில், முன்னிண நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. நாயகியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது வில்லியாகவும் நடிப்பார். அது எந்த படம் தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம். 

த்ரிஷா ரொம்ப பிசி!

தற்போதுள்ள தமிழ் திரையுலக நடிகைகளுள் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருபவர், த்ரிஷா. தமிழ் மொழியில் மட்டுமன்றி, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் சில படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். 41 வயதாகும் த்ரிஷா, இன்றளவும் கதாநாயகியாகத்தான் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் லியாே திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டு வரிசையாக படங்களில் கமிட் ஆனார். தனது முதல் வெப் தொடரான, ‘பிருந்தா’ சீரிஸிலும் நடித்தார். 

அஜித்துடன், ஏற்கனவே பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கும் இவர் தற்போது உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடனும், மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடனும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மொத்தத்தில் தென்னிந்திய திரையுலகின் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

மேலும் படிக்க | த்ரிஷா இதுவரை சந்தித்த சர்ச்சைகள்! அதுக்குன்னு இவ்வளவா...

வில்லி கதாப்பாத்திரத்தில்..

நடிகை த்ரிஷா, கதாநாயகியாக மட்டுமல்ல வில்லியாக கூட நடித்திருக்கிறார். அப்படி அவர் தனுஷ் உடன் இணைந்து நடித்த படம்தான், கொடி. 2016ஆம் ஆண்டு வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற, த்ரிஷாவின் வில்லி கதாப்பாத்திரத்திற்கும் மக்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, இவருக்கு நாயகி ரோல் மட்டுமல்ல, வில்லியின் கதாப்பாத்திரமும் செட் ஆகும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு தோன்றியது. 

சர்ச்சை இயக்குநருடன்..

த்ரிஷா, தற்போது ஒரு புதிய படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவரை, வில்லி ரோலில் நடிக்க அழைத்த இயக்குநர் யார் தெரியுமா? இந்திய சினிமாவில் சர்ச்சை இயக்குநராக இருப்பவர், சந்தீப் ரெட்டி வங்காதான். அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி அதை ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக்கிய இவர், அதற்கான நெகடிவ் தாக்குதல்களையும் எதிர்கொண்டார். யார் என்ன கூறினாலும் தனது ஆணாதிக்க கொள்கைகளில் உறுதியாக இருக்கும் இவர், சமீபத்தில் அனிமல் படத்தை இயக்கியிருந்தார். 

அனிமல் திரைப்படத்தில் இவர் பெண்களை காட்டியிருந்த விதம், பலருக்கு சகித்துக்கொள்ள முடியாத வகையில் இருந்தது. இது குறித்து பலர் விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். இப்படம், நீளம் அதிகமாக இருந்து, பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த போதும், உலகளவில் மொத்தம் ரூ.900 கோடிக்கும் மேல் வசூலை பெற்று ஹிட் அடித்தது. எனவே, இவர் இந்திய சினிமாவின் வெற்றி இயக்குநராகவும் பார்க்கப்படுகிறார். இவர் அடுத்து ஸ்பிரிட் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்கிறார். இந்த புதிய படத்தில்ததான் நடிகை த்ரிஷா வில்லியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபாஸும் திர்ஷாவும் ஏற்ற்கனவே வெளியான சில தெலுங்கு படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். தற்போது, த்ரிஷா ஸ்பிரிட் படத்தில் நடிக்க இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | விஜய்யுடன் எடுத்த பிரைவேட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா! “ஒரு வேள இருக்குமோ..”

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News