அக்டோபர் மாதம் ரிலீஸாகும் 5 பெரிய ஹீரோக்களின் படங்கள்! முழு லிஸ்ட்..

Big Tamil Movies Releasing On October 2024 : ரஜினிகாந்த் முதல், சிவகார்த்திகேயன் வரை பல ஹீரோக்களின் படங்கள், இந்த அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Oct 1, 2024, 03:28 PM IST
  • அக்டோபர் மாதம் வெளியாகும் பெரிய படங்கள்
  • லிஸ்டில் 5 பெரிய தமிழ் படங்கள்!
  • என்னென்ன தெரியுமா?
அக்டோபர் மாதம் ரிலீஸாகும் 5 பெரிய ஹீரோக்களின் படங்கள்! முழு லிஸ்ட்.. title=

Big Tamil Movies Releasing On October 2024 : 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், எந்த பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாகவில்லை. ஜூலை மாதத்திற்கு பிறகுதான், தமிழ் சினிமா ரசிகர்களின் தாகத்தை தீர்க்கும் வகையிலான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த அக்டோபர் மாதம் என்னென்ன படங்கள் வெளியாக இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். 

வேட்டையன்:

அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் படம், வேட்டையன். ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கியிருக்கிறார். அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். அது மட்டுமன்றி அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பழைய கதாநாயகிகளும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம், அக்டோபர் 10ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

அமரன்:

தற்போது டாப் ஹீரோவாக வளர்ந்து வருபவர், சிவகார்த்திகேயன். புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் அமரன் படத்தில்‘மேஜர் முகுந்த்’கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படம், அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பிரதர்:

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம், பிரதர். இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். கோலிவுட்டில் சில ஜாலியான படங்களை கொடுத்த இயக்குநரான ராஜேஷ், இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதில், பூமிகா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகியிருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படம், அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.

மேலும் படிக்க | இந்த வாரம் ஒரே நாளில் வெளியாகும் 6 பெரிய திரைப்படங்கள்! எதை முதலில் பார்க்கலாம்?

ப்ளடி பெக்கர்:

சின்னத்திரை நாயகனாக இருந்து, இன்று வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் கவின். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ப்ளடி பெக்கர். இது, இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிக்கும் முதல் படமாகும். இந்த படத்தை, அறிமுக இயக்குநர் சிவ்பாலன் இயக்கியிருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதே தவிர, இதை தவிர படத்தின் அப்டேட்டுகள் எதுவுமே வெளியாகவில்லை. இந்த நிலையில், இப்படத்தை அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. 

October 2024

வணங்கான்:

சூர்யா பாதி நடித்து பின்பு விலகி, அருன் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம், வணங்கான். பாலா இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி.எஸ் ஆகியோர் இசையமைத்திருக்கிறார். இந்த படம், அக்டோபர் மாதத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்னும் இதன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியிடப்படவில்லை. 

லக்கி பாஸ்கர்:

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், லக்கி பாஸ்கர். இந்த படத்தை, வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். இதில் மீனாட்சி சௌத்ரி, ஆயிஷா கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை, அக்டோபர் 31ஆம் தேதி முதல் தியேட்டர்களில் பார்க்கலாம். 

மேலும் படிக்க | விரைவில் ஓடிடியில் வெளியாகும் 4 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News