இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகா் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் கமல் எழுதி பாடி ஆடியுள்ள பத்தல பத்தல பாடலின் சில வரிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அந்த பாடலில் மத்திய அரசை திருடன் என்றும், கொரோனா தடுப்பூசி திட்டத்தை விமர்சித்தும், சாதிய ரீதியாகப் பிரச்சனைகளைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ள வரிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துக்களுடன் டிரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரிதா நேற்று அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில், ராஜ்கமல் நிறுவனத்திற்கு அந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் டிரெய்லர் வெளியீட்டு விழாவை நிறுத்த வேண்டுமென்றும், சமந்தப்பட்ட வரிகளை நீக்க வேண்டுமென்றும் மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இசையமைப்பாளர் டி.இமானுக்கு டும் டும் டும்... பொண்ணு யாரு தெரியுமா!
இந்நிலையில், கமல் எழுதி பாடியுள்ள பத்தல பத்தல பாடலை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருக்க, மறுபுறம் சர்ச்சைகளும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
மேலும் படிக்க | நடிகர் விக்ரம் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR