Video: நடிகர் அஜித்தின் ரேஸ் கார் விபத்து... பதற வைக்கும் வீடியோ

Ajith Kumar Race Car Accident: துபாயில் நடைபெற்ற பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமாருக்கு காயம் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - Sudharsan G | Last Updated : Jan 7, 2025, 06:54 PM IST
  • 24H Dubai கார் ரேஸில் பங்கேற்க அஜித் துபாய் சென்றுள்ளார்.
  • Ajith Kumar Racing குழுவில் அஜித் உள்பட 4 ரேஸ் ஓட்டுநர்கள் உள்ளனர்.
  • இதுவே இந்த குழுவின் முதல் ரேஸ் ஆகும்.
Video: நடிகர் அஜித்தின் ரேஸ் கார் விபத்து... பதற வைக்கும் வீடியோ title=

Ajith Kumar Race Car Accident: துபாயில் நடைபெற்ற பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமாருக்கு காயம் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கார் ஓட்டியது அஜித்தான் என்றும் விபத்திற்கு பிறகு அஜித் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் எனவும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவில் கார், அங்கிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இருப்பினும், ஓட்டுநர் எவ்வித சிரமமும் இன்றி காரில் இருந்து இறங்கி, அவசர உதவிக்கு வந்தவருடன் சேர்ந்து செல்வதை வீடியோவில் பார்க்க முடிந்தது.   

Ajith Kumar Racing குழு

Ajith Kumar Racing என்ற பெயரில் கார் ரேஸ் குழுவை நடிகர் அஜித் குமார் நிர்வகித்து வருகிறார். அஜித் குமார் அணியில் முன்னணி ரேஸர்களான மாத்தியூ டெட்ரி, ஃபேபியன் டஃபியக்ஸ் மற்றும் கேமரூன் மெக்லியோட் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில் அஜித் குமார் ரேசிங்கின் அணி மேலாளராக ஃபேபியன் டஃபியக்ஸ் பொறுப்பேற்றார்.

மேலும் படிக்க | அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்

Ajith Kumar Racing குழுவின் முதல் ரேஸ் 24H துபாய்

24H Dubai என்ற கார் ரேஸில் பங்கேற்க Ajithkumar Racing குழுவினர் அங்கு அவர்களின் பயிற்சியை இன்று தொடங்கி உள்ளனர். இதுகுறித்து முன்னரே அவர்களின் குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டது. 24H துபாய் 2025 ரேஸை அஜித் மிகவும் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. கார் ரேஸில் இவரது புதிய குழுவுக்கு இதுவே தொடக்கமாகும். அதன் தொழில்நுட்ப மற்றும் தளவாட பார்ட்னராக Bas Koeten Racing குழு இணைந்திருக்கிறது. 

ஜன. 3ஆம் தேதி அஜித் குமாரின் மகள் அனுஷ்காவின் பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை கொண்டாட அஜித் குமார் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றிருந்தார். அதன் பின்னர், ஜன.5ஆம் தேதி அஜித் குமார் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தார். அன்றே அவர் துபாய்க்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. 

அஜித்தின் குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி

அஜித் குமார் சினிமாவில் மட்டுமின்றி ரேஸில் கவனம் செலுத்துகிறார் என்றாலும் கடைசியாக அவரது திரைப்படம் வெளியாகி சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அவரது துணிவு திரைப்படம் வெளியானது. அதன்பின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடிகர் அஜித் நடித்துவிட்டார். 

விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர், டிச.31ஆம் தேதி இரவு விடாமுயற்சி திரைப்படம் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் அறிவித்தது. மேலும், இத்திரைப்படம் அடுத்து எப்போது வெளியாகும் எனவும் அறிவிக்கப்படவில்லை. குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்.10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நேற்று அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் விடாமுயற்சி எப்போது?

அந்த வகையில், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு முன்பாக அதாவது பிப்ரவரி மாதத்தில் விடாமுயற்சி ரிலீஸ் ஆகுமா அல்லது குட் பேட் அக்லிக்கு பிறகு விடாமுயற்சி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடத்தில் உள்ளது. இதற்கான விடை லைகா மற்றும் அஜித்தின் பக்கம்தான் உள்ளது. 

மேலும் படிக்க | விடாமுயற்சி அவுட்-குட் பேட் அக்லி இன்! படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News