பிரைம் வீடியோவின் 'மாடர்ன் லவ் சென்னை' முன்னோட்டம் வெளியீடு

மே 18 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படத்தில் ஆறு அத்தியாங்கள் இடம்பெற்றுள்ளன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 12, 2023, 11:56 AM IST
  • மாடர்ன் லவ் மே 18, 2023 அன்று பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது.
  • முனனோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.
  • மாடர்ன் லவ் சென்னை படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
பிரைம் வீடியோவின் 'மாடர்ன் லவ் சென்னை' முன்னோட்டம் வெளியீடு title=

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. பிரைம் வீடியோவில் மே 18 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கிறார்கள். 

சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த மாடர்ன் லவ் எனும் அசல் இணையத் தொடரின் தமிழாக்க திரைப்படத்தில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், அசோக் செல்வன், டி ஜே பானு, ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தரா, ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், கிஷோர் ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, வாமிகா மற்றும் பிபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் மே 18, 2023 அன்று பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. 

மேலும் படிக்க | Farhana Movie Review: இஸ்லாமியர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமா ஃபர்ஹானா? விமர்சனம் இதோ!

இந்நிலையில் சென்னையில் இதன் முனனோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் அமேசான் பிரைம் இந்திய பிரிவின் தலைவரான சுஸாந்த் ஸ்ரீராம் உள்ளிட்ட அமேசான் பிரைம் வீடியோவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதன் போது படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜா மாடர்ன் லவ் சென்னை படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

மே 18 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படத்தில் ஆறு அத்தியாங்கள் இடம்பெற்றுள்ளன.

1."லாலாகுண்டா பொம்மைகள்" - ராஜுமுருகன் எழுதி, இயக்கியுள்ள இந்த அத்தியாயத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இதில் ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்.

2.“இமைகள்” - பாலாஜி தரணீதரன் கதை எழுத, பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கிறார். ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதில் அசோக் செல்வன் மற்றும் டி.ஜே. பானு நடித்துள்ளனர்.

3.“காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி” – ரேஷ்மா கட்டலா கதை எழுத, கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இதில் ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ் மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

4.“மார்கழி” – பாலாஜி தரணீதரன் கதை எழுத, அக்‌ஷய் சுந்தர் இயக்கியிருக்கிறார். விகாஸ் வாசுதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங் மற்றும் ஸ்ரீகிருஷ்ண தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

5.“பறவை கூட்டில் வாழும் மான்கள்” – பிரதீப் குமார் .எஸ் கதை எழுத, பாரதிராஜா இயக்கியிருக்கிறார். ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் கிஷோர், ரம்யா நம்பீசன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

6.“நினைவோ ஒரு பறவை” – இந்த அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. நிரவ் ஷா மற்றும் ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்யி, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் வாமிகா மற்றும் பிபி நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News