WATCH: வெளியானது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் ‘ஐரா’ Trailer....

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா கலையரசன் கூட்டணி நடிப்பில் உருவான ஐரா படத்தின் ட்ரைலர் வெளியானது...

Last Updated : Mar 20, 2019, 06:57 PM IST
WATCH: வெளியானது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் ‘ஐரா’ Trailer.... title=

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா கலையரசன் கூட்டணி நடிப்பில் உருவான ஐரா படத்தின் ட்ரைலர் வெளியானது...

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் யமுனா, பவானி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மார்ச் 28 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ட்ரெய்லர் முழுக்க நயன்தாரா இடம்பெறும் காட்சிகளாகவே அமைந்துள்ளன. நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா என கதாநாயகியை மையப்படுத்திய கதையில் நடிகை நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்தப் படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

 

Trending News