கிச்சா சுதீப் - அஜய் தேவ்கன் விவகாரம் இந்திய அளவில் பேசு பொருளானது. இந்த விவகாரத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமா, வட இந்திய சினிமா என்ற விவாதங்கள் அதிகளவு ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த சூழலில் நவாசுதீன் சித்திக்கின் பேச்சு மீண்டும் இந்த விவகாரத்தை பற்ற வைத்திருக்கிறது.
பேட்டி ஒன்றில் நவாசுதினிடம், “புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்களுக்கு சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “பொதுவாக தென்னிந்திய திரைப்படங்களை இதுவரை நான் பார்த்ததே கிடையாது. அதனால் தென்னிந்திய திரையுலகம் குறித்த கேள்விக்கு நான் பதில் கூறுவது சரியாக இருக்காது.
ஆனால், ஒரு விஷயத்தை என்னால் தெளிவாக கூற முடியும். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் சிறிது காலத்துக்கு மக்கள் அதுகுறித்தே பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதைகளின் தாக்கத்தில் பல படங்கள் வெளியாகும். இதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது” என்றார்.
மேலும் படிக்க | AK51 அன்று வருகிறது AK61 அப்டேட்?
அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நவாசுதின் சித்திக் அடையாளப்பட்ட கேங்ஸ் வாஸிபூர் படம் சுப்ரமணியபுரத்தின் தாக்கத்திலிருந்துதான் உருவானது. அதில் நடித்துவிட்டு தற்போது தென்னிந்திய படங்களை அலட்சியமாக நினைத்திருப்பது கண்டனத்துக்குரியது என நெட்டிசன்ஸ் கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க | இரண்டு பிலாப் படங்களில் இருந்து தப்பித்த சூப்பர் ஸ்டார்!
மேலும் தென்னிந்திய படங்களே பார்க்காத ஒருவர் எதற்காக ரஜினியுடன் பேட்டை படத்தில் நடித்தார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR