கண்ணீருடன் நிற்கும் ஜானகி - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Padamati Sandhyaragam: இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் ஜானகி கோவில் திருவிழாவில் ரகுராமிடம் சிக்காமல் தப்பித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.     

Written by - RK Spark | Last Updated : Oct 11, 2023, 02:38 PM IST
  • கண்ணீருடன் நிற்கும் ஜானகி.
  • அக்காவின் வாழ்க்கையை பறித்து பரிதவிக்கும் சந்தியா.
  • சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்.
கண்ணீருடன் நிற்கும் ஜானகி - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் சந்தியா ராகம்.  இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் ஜானகி கோவில் திருவிழாவில் ரகுராமிடம் சிக்காமல் தப்பித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   அதாவது, ஜானகி ஒரு பாக்ஸை திறந்து அதில் இருக்கும் ஒரு வளையலை எடுத்து பார்க்க அப்படியே பிளாஸ்கட்டிற்கு காட்சிகள் நகர்கிறது. ஜானகிக்கும் கிஷோருக்கும் திருமணம் நடக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து இருக்க ஜானகி மணக்கோலத்தில் இருக்க சந்தியா ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்க ஜானகி தன்னை பிரிவதால் அழுவதாக நினைத்துக் கொள்கிறாள். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

சந்தியா எதையோ சொல்ல வர அதற்குள் அப்பா ஜானகியை மணமேடைக்கு கூட்டி சென்று உட்கார வைத்துவிட மாப்பிள்ளைக்காக ஜானகி காத்திருக்க கடைசியில் சந்தியா கிஷோருடன் திருமண கோலத்தில் வந்து நிற்க அவரது அப்பா அதிர்ச்சி அடைகிறார். ஜானகி கண்ணீருடன் கலங்கி நிற்க அப்பா அவருடைய அக்காவான ரகுராமின் அம்மாவிடம் உன் பையன் கிட்ட சொல்லி என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க சொல்லு என்று மன்றாடி கேட்கிறார். ரகுராமின் அம்மாவும் தாலி கட்ட சொல்றேன். ஆனா இனிமே அந்த சந்தியாவுக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த ஒட்டும் உறவும் இருக்கக் கூடாது என சத்தியம் வாங்குகிறாள். பிறகு பிளாஸ் கட் முடியை ஜானகி கையில் இருந்த வளையல் கீழே விழுந்து உடைய ஜானகி மனம் பதறுகிறது.

மறுபக்கம் சந்தியா அக்காவிடம் பேச வேண்டும் என தொடர்ந்து போன் போட்டுக் கொண்டே இருக்க வீட்டுக்கு வரும் மாயா அவங்கதான் எல்லாரும் பண்ண வெறுத்துட்டாங்களே அப்புறம் எதுக்குன்னு போன் பண்ணிட்டு இருக்க என அம்மாவிடம் சத்தம் போடுகிறாள். சந்தியா தனக்கும் தன்னுடைய அக்கா ஜானகிக்கும் இடையே இருக்கும் அழகான உறவு குறித்து எடுத்து சொல்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | விஜய்யின் 'லியோ' படத்தில் உருவாகி உள்ள புதிய சிக்கல்! குழப்பத்தில் திரையரங்குகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News