பிரபல பட அதிபர் பஞ்சு அருணாசலம் மரணம்

Last Updated : Aug 9, 2016, 02:22 PM IST
பிரபல பட அதிபர் பஞ்சு அருணாசலம் மரணம்

பிரபல பட அதிபர் பஞ்சு அருணாசலம் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 

1941-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி பிறந்த தனது இளமைப் பருவத்தில் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர்.

அன்னக்கிளி, ப்ரியா, உல்லாச பறவைகள், கழுகு உள்பட 15 படங்களை தயாரித்தார். அன்னக்கிளி படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். 8 படங்களை டைரக்டு செய்துள்ளார். இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். 

ரஜினி, கமலைக் கொண்டு அதிகப் படங்களைத் தயாரித்துள்ளார். இருவருக்கும் ஏற்றவாறு கதை எழுதி பல வெற்றி பாடங்களை தந்தவர். பஞ்சு அருணாசலத்தின் மறைவுக்குத் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். 

பஞ்சு அருணாச்சலத்துக்கு அருணாச்சலம், சுப்பு பஞ்சு இரண்டு மகன்களும், கீதா என்ற ஒரு மகளும் உள்ளனர். 

More Stories

Trending News