பொன்னியின் செல்வன்: இரண்டு பாகங்களிலும் நடித்து முடித்த ஜெயம் ரவி!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இரண்டு பாகங்களிலும் என்னுடைய பகுதியை நடித்து முடித்து விட்டதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2021, 06:18 PM IST
  • மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன்
  • இப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது
  • பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் அருள் மொழி வர்மன் எனும் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி இந்த படத்தில் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன்: இரண்டு பாகங்களிலும் நடித்து முடித்த ஜெயம் ரவி!  title=

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன்.  இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது.  இப்படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்,நடிகைகள் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்புகள் தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன.  சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் என்ற இடத்தில் நடைபெற்றது. 

இப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.   சுந்தர சோழர் - பிரகாஷ் ராஜ், ஆதித்ய கரிகாலன் - விக்ரம், அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி, வந்தியத் தேவன் - கார்த்தி, குந்தவை - த்ரிஷா, நந்தினி - ஐஸ்வர்யா ராய், பூங்குழலி - ஐஸ்வர்யா லட்சுமி, வானதி - ஷோபிதா, பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார், சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன், கடம்பூர் சம்புவரையர் - நிழல்கள் ரவி, மலையமான் - லால், ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம், அநிருத்த பிரம்மராயர் - பிரபு, சோமன் சாம்பவன் - ரியாஸ் கான் என்று முக்கிய நடிகர் நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் அருள் மொழி வர்மன் எனும் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி இந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்துவிட்டது என்று தகவல் வெளியான நிலையில் இன்று இரண்டு பாகங்களுக்கும் என்னுடைய பகுதியில் நடித்து முடித்துவிட்டேன் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.  மேலும் இன்று அவரது தாயார் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe

Trending News