ஹாலிவுட் சினிமாவை மிரட்டும் “சாஹோ” படத்தின் ட்ரைலர் வெளியானது

ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீசாக உள்ள பிரமாண்டமான திரைப்படம் “சாஹோ” படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Aug 10, 2019, 06:11 PM IST
ஹாலிவுட் சினிமாவை மிரட்டும் “சாஹோ” படத்தின் ட்ரைலர் வெளியானது
Pic Courtesy : Youtube Grab

புதுடெல்லி: ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீசாக உள்ள பிரமாண்டமான திரைப்படம் “சாஹோ” படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. படத்தின் ட்ரைலரை பார்ப்பவர்களை சிலிர்க்க வைக்கும் காட்சிகள் ஏராளம். 

பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படம் சாஹோ. இந்த படத்தை இயக்கிநர் சுஜீத் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பாலிவுட் நாயகி ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவடையாததால், ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் ட்ரைலர், அந்தந்த மொழிகளில் வெளியிடப்பட்டது.