'சாஹூ': பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரதா கபூர் ஒப்பந்தம்

Last Updated : Aug 16, 2017, 02:23 PM IST
'சாஹூ': பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரதா கபூர் ஒப்பந்தம் title=

பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சாஹூ' படத்தின் நாயகியாக ஷ்ரதா கபூர் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

பாகுபலியை அடுத்து தொடர்ந்து 'சாஹூ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் 'சாஹூ' உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

பிரபாஸ் உடன் நாயகியாக நடிப்பதற்கு பல்வேறு முன்னணி நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த வகையில் தற்போது இப்படத்திற்கு ஷ்ரதா கபூர்  நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் வில்லனாக நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளராக மதி, கலை இயக்குநராக சாபு சிரில் மற்றும் இசையமைப்பாளராக சங்கர் - இசான் - லாய் இணை பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News