12 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்!

கில்லி, போக்கிரி, வில்லு போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து 12 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் 'தளபதி66' படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கவிருக்கிறார்.  

Written by - RK Spark | Last Updated : May 9, 2022, 09:55 AM IST
  • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.
  • பல முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
12 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்! title=

பீஸ்ட் படத்தையடுத்து நடிகர் விஜய் தற்போது 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார்.  விஜயின் 'தளபதி66' படத்தை 'தோழா', 'மகரிஷி' போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வம்சி இயக்க, இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.  கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது, இதன் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலானது.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார், மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | உதயநிதியிடம் சிவகார்த்திகேயனை கோர்த்துவிட்ட ’டான்’ இயக்குநர்

இப்படத்தில் நடிக்கப்போகும் மற்ற முக்கிய பிரபலங்கள் குறித்து படக்குழு சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்து உள்ளது.  அதன்படி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் ஜெயசுதா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே நடிகை ராதிகா சரத்குமார் இப்படத்தில், சரத்குமார் நடிக்கப்போவதை அவரது ட்விட்டர் வழியாக தெரிவித்திருந்தார், அதேபோல இந்த திட்டத்தில் பிரகாஷ் ராஜ் இணைவார் என்று சில பேச்சுக்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதியாகியுள்ளது.  தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் காம்போ மிகவும் பிடித்தமான ஒன்று.  2004ம் ஆண்டு வெளியான 'கில்லி' படத்தில் விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகிய இருவருக்குமிடையேயான காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது, அதனைத்தொடர்ந்து 2007ம் ஆண்டு வெளியான 'போக்கிரி' படத்திலும் இந்த இருவரின் காம்போ பெரிதளவில் வரவேற்பை பெற்றது.

prakashraj

அதன்பின்னர், இறுதியாக இவர்கள் 2009ம் ஆண்டு வெளியான 'வில்லு' படத்தில் நடித்திருந்தனர், தற்போது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பின்னர் இவர்களின் கூட்டணி இணைந்து கலக்க போகிறது.  'தளபதி66' குடும்ப கதையம்சம் கொண்ட படமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது, 90கள் மற்றும் 2000களின் ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்களை போன்று இந்த படம் அமையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | ஷங்கரின் அடுத்த பட ஹீரோயின் இவர்தானாம்- கதையும் ‘லீக்’ ஆயிடுச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News