ஏகே 61 - ஹீரோயினாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்?

அஜித்தின் 61ஆவது படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 12, 2022, 10:14 AM IST
  • அஜித் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகி
  • ஏகே 61 பூஜை
  • ஹைதராபாத்தில் தொடங்கியது ஏகே 61 படப்பிடிப்பு
ஏகே 61 - ஹீரோயினாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்? title=

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை வலிமை திரைப்படம் பெற்றது. படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டதாகவும் ரசிகர்கள் கூறினர்.

மேலும், வலிமை படத்தை அஜித் சொல்லித்தான் வினோத் எடுத்தார். அதனால்தான் படத்தின் திரைக்கதை போன்ற விஷயங்கள் சொதப்பிவிட்டன என்ற தகவல்கள் வெளியாகின.

Ajith

இதற்கிடையே அஜித்தின் 61ஆவது படத்தையும் வினோத்தே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | நான் சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க - விஜய் கோபம்!

இந்தச் சூழலில் தனது 61ஆவது படத்தில் நடிப்பதற்காக அஜித் சில நாள்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றார். இந்நிலையில் படத்தின் பூஜை ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

H Vinoth

மேலும், இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தற்போது படத்தின் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரகுல் ஏற்கனவே, ஹெச். வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 

மேலும் படிக்க | மகன் கேட்ட ஒரே கேள்வி... ஆடிப்போன விஜய்..! அப்படி என்ன கேட்டார்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News