நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வர இ - பாஸ் நடைமுறை தொடரும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுபடி மலை மாவட்டங்களான நீலகிரிக்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் வர இ- பாஸ் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. நேற்று இ பாஸ் நடைமுறை நிறைவடையும் நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நீலகிரி மாவட்டத்திற்கு பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் 07.05.2024 முதல் இ-பாஸ் பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. கனமழை வெளுத்து வாங்கப்போகுது - உஷார் மக்களே!
இதனைத் தொடர்ந்து இது நாள் வரை இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறையினை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்குள் வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள், நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த மே மாதம் இந்த இ பாஸ் நடைமுறையை மீண்டும் கொண்டு வந்தது. ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்ற பின்பு தான் செல்ல வேண்டும் என்று கூறி இருந்தனர். ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைசார்ந்த சுற்றுலா இடங்களில் பயணிகளின் வருகையை குறைப்பதற்கும், சுற்றுலா வருபவர்களுக்கு நல்ல சுற்றுலா அனுபவத்தை உறுதி செய்வதற்கும் தமிழக அரசு இந்த நடைமுறை அமல்படுத்தியது. கோடை விடுமுறையில் ஏற்படுத்தும் கூட்ட நெரிசலால் பல வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானர்.
தற்போது கோடை விடுமுறை முடிந்து பல நாட்கள் ஆகியும் இந்த நடைமுறை தொடரும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் இ-பாஸ் சரிபார்ப்பு பணிக்காக வாகனங்களை நிறுத்தி சரிபார்ப்பிற்கு பிறகு நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பினை தர அனைத்து பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | தவெக கட்சி கொடிக்கு எழுந்த பெரிய ஆபத்து நீங்கியது - தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ