மருத்துவமனையில் ரஜினிகாந்த்! டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..

Actor Rajinikanth Health Condition Now Latest Update : நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, அவர் வீடு திரும்புவது எப்பாேது, என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Oct 1, 2024, 10:12 AM IST
  • ரஜினிகாந்த் உடல் நலம் இப்போது எப்படியிருக்கிறது?
  • அவர் வீடு திரும்புவது எப்போது?
  • லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
மருத்துவமனையில் ரஜினிகாந்த்! டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்.. title=

Actor Rajinikanth Health Condition Now Latest Update : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த பிரபலமாகவும் விளங்குபவர், நடிகர் ரஜினிகாந்த். இவர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (செப்டம்பர் 30) இரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் உள்பட மக்கள் பலர் அவருக்கு என்னாச்சோ ஏதாச்சோ என பதறி விட்டனர். 

மருத்துவமனையில் அனுமதி-ஏன்?

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். கடும் வயிற்றி வலி காரணமாக அவதிப்பட்ட இவருக்கு மருத்துவமனையில் தகுந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு அடிவயிற்றுப் பகுதி ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஜினிகாந்தின் ரசிகர்கள் கவலை கொள்ள ஆரம்பித்தவுடன் அவரது மனைவி லதா, “உங்கள் தலைவருக்கு ஒன்றுமில்லை-நலமுடன் இருக்கிறார்” என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இதையடுத்து, ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்த அப்டேட்டை, மருத்துவக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட இருப்பதாகவும், இதனை, இந்தியாவின் முன்னணி இதயவியல் மருத்துவர் ஒருவர் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

முன்கூட்டிய முடிவெடுக்கப்பட்டது:

73 வயதாகும் ரஜினிகாந்திற்கு தற்போது மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை, ஏற்கனவே கலந்தாலோசிக்கப்பட்ட ஒன்று என்றும், இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு கிடையாது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த மருத்துவ சிகிச்சையை மனதில் வைத்துதான், கூலி படத்திற்கு கால்ஷீட்களும் காெடுக்கப்பட்டிருப்பதாகவும் இதிலிருந்து முழுமையாக குணமடைந்தவுடன் ரஜினிகாந்த், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? 

நடிகர் ரஜினிகாந்த், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு 2 அல்லதது 3 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும் என்றும், இதையடுத்து இந்த வார இறுதிக்குள்ளாக அவர் வீடு திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருப்பினும், ரஜினி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவனையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் மக்கள் நிம்மதியடைவர். 

Rajinikanth

மேலும் படிக்க | Rajinikanth Health | அப்பல்லோவில் ரஜினிகாந்த்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்ட ட்வீட்..

அடுத்த வாரம் வேட்டையன் ரிலீஸ்!

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமான வேட்டையன், அடுத்த வாரம் (அக்டோபர் 10) வெளியாக இருக்கிறது. விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை ஆகிய பண்டிகை தினங்களை ஒட்டி வெளியாகும் இந்த படம், எப்போதும் பேல ரஜினிக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை, டி.ஜே.ஞானவேல இயக்கியிருக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி, ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில், ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 1 மணி நேரம் நின்று பேசிய விஷயங்கள் பெரிதாக வைரலானது. 

கூலி படப்பிடிப்பு:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், கூலி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ ரசிகர்களை கவர்ந்ததை தொடர்ந்து படமும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைப்பெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இதில் கலந்து கொண்டு வந்தார். 

இப்போது உடல்நலம் குன்றியிருக்கும் நிலையில், இன்னும் சில நாட்கள் கழித்து ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உப்பேந்திரா, சௌபின் சாஹீர், சத்யராஜ் உள்ளிட்டாேர் நடிக்கின்றனர்.

மேலும் படிக்க | நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News