நடிகர் ராம் சரணின் மனைவி கர்ப்பம், சிரஞ்சீவி வீட்டில் கொண்டாட்டம்

Ram Charan And Wife Upasana Expecting First Child: ராம் சரண் மற்றும் உபாசனா ஜோடிக்கு ரசிகர்களுக்கு, திரை பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 12, 2022, 03:50 PM IST
  • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண்.
  • நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.
  • 10 வருடங்களுக்கு பிறகு குழந்தை.
நடிகர் ராம் சரணின் மனைவி கர்ப்பம், சிரஞ்சீவி வீட்டில் கொண்டாட்டம் title=

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம் சரண். இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். கடந்த 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு நடிகர் ராம் சரண் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார்.

அதேபோல் கடந்த 2009 ஆம் ஆண்டு மாவீரன் என்ற திரைப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு ஆரஞ்சு, 2012 ஆம் ஆண்டு ரச்சா, 2013 ஆம் ஆண்டு நாயக், 2014 ஆம் ஆண்டு ஏவடு போன்ற தெலுங்கு திரைப்படத்திலும் ஜன்சீர் என்ற ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து இருந்தார். 

மேலும் படிக்க | நடிகர் ஷாரூக்கான்: மெக்காவில் உம்ரா! வைஷ்ணவ் தேவியில் சரணகோஷம்!

இதனிடையே நடிகர் ராம் சரண் கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு தங்களுடைய முதல் குழந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இந்த காதல் ஜோடிகள்.

மேலும் படிக்க | அடேங்கப்பா! லவ் டுடே படத்துக்கு பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

இந்த நிலையில் இந்த செய்தியை நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ராம் சரண் - உபாசனா ஜோடிக்கு ரசிகர்களுக்கு, திரை பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் கடந்த மார்ச் ,மாதம் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ மெகா வெற்றி படத்தை தொடர்ந்து நடிகர் ராம்சரண் இயக்குநர் ஷங்கருடன் கைகோத்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஆர்சி15’ என தலைப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரஜினிக்கு பாபா வில்லன் பிறந்தநாள் வாழ்த்து! என்ன கூறினார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News