மாஸாக வெளியாகியுள்ள ராம் பொதினேனியின் டபுள் ஐஸ்மார் டீசர்!

நடிகர்கள் உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியன் படமான ’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!  

Written by - RK Spark | Last Updated : May 15, 2024, 05:27 PM IST
  • ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடித்துள்ள டபுள் ஐஸ்மார்.
  • பூரி ஜெகன்நாத் எழுதி, இயக்கி உள்ளார்.
  • விரைவில் படம் வெளியாக உள்ளது.
மாஸாக வெளியாகியுள்ள ராம் பொதினேனியின் டபுள் ஐஸ்மார் டீசர்! title=

’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர்.  ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட டபுள் மடங்கு ட்ரீட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் ராமின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.  ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தன்னைச் சுற்றியுள்ள சில விஞ்ஞானிகளுடன் இருக்கும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை விவரிக்க சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும் வாய்ஸ் ஓவருடன் டீசர் தொடங்குகிறது. 

மேலும் படிக்க | “நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..

பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் உஸ்தாத் ஐஸ்மார்ட் ஷங்கர் என்ற டபுள் ஐஸ்மார்ட்டாக ராம் மீண்டும் வந்துள்ளார். இதில் காவ்யா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகை சஞ்சய் தத் பவர்ஃபுல்லான பிக் புல்லாக மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தைப் போலவே, ‘டபுள் ஐஸ்மார்ட்’டிலும் ஆன்மிகத் தொடுதலுடன் அதிரடியான ஆக்‌ஷன் கிளைமாக்ஸ் காட்சி உள்ளது. பிரம்மாண்டமான சிவலிங்கமும், கிளைமாக்ஸ் சண்டை நடக்கும் பெரும் கூட்டமும் பார்வையாளர்களை நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கும். டீசரைப் போலவே, ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படமும் டபுள் ஆக்‌ஷன், எண்டர்டெயின்மெண்ட்டுடன் இருக்கும் என்பது தெளிவாகிறது. வழக்கம் போலவே இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது ஹீரோவை ஸ்டைலிஷ், மாஸ் மற்றும் அதிரடி நாயகனாக திரையில் காண்பிக்க உள்ளார். 

டீசரில் ஒற்றை வரியில் இடம்பெற்றுள்ள வசனங்களும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. தலைப்புக்கு ஏற்றவாறு டபுள் ஆக்‌ஷன், டபுள் எனர்ஜி மற்றும் டபுள் ஃபன்னாக ராமும் திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளார். சஞ்சய் தத் ஸ்டைலான வில்லனாக நடிக்கிறார். கவர்ச்சி நாயகியாக காவ்யா தாபர் வலம் வர, படத்தில் தேஜாவு போன்ற காட்சிகளில் அலி நகைச்சுவையில் கலக்கியுள்ளார். இதற்கு முன்பு இயக்குநர் பூரி மற்றும் அலி காம்பினேஷன் ரசிகர்களுக்குப் பிடித்தது போல, இந்தப் படத்திலும் ரசிகர்கள் என்ஜாய் செய்வார்கள். சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலியின் காட்சியமைப்புகள் அருமையாக வந்துள்ளது மற்றும் மணி ஷர்மாவின் பின்னணி இசை காட்சியை இன்னும் அடுத்த நிலைக்கு உயர்த்துகிறது. 

ஸ்டெப்பா மார் மற்றும் கிரி கிரி சவுண்ட்ஸ் ரசிகர்களின் ஹைப்பை இன்னும் அதிகரிக்கும் அதே வேளையில், கிளைமாக்ஸில் காட்டப்படும் சிவனுக்கு ஏற்ற ஒலி தெய்வீகத்தன்மையை சேர்க்கிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள ‘டபுள் ஐஸ்மார்ட்’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்த டீசர் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் படம் குறித்தான  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் படக்குழு வெளியிடும். 

மேலும் படிக்க | பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்! 2வது சீசன் ரிலீஸ் தேதி இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News