பாடகி எஸ்.ஜானகி மரணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்...!!

பாடகி எஸ்.ஜானகி நலமுடன் இருப்பதாகவும் அவர் தொடர்பாக பரவிவரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவரின் மகன் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated: Jun 29, 2020, 10:37 AM IST
பாடகி எஸ்.ஜானகி மரணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்...!!

பாடகி எஸ்.ஜானகி (வயது 82) நலமுடன் இருப்பதாகவும் அவர் தொடர்பாக பரவிவரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவரின் மகன் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி . இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர் சமீபத்தில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 

 

READ | என் நண்பர், என் காதலன், என் குழந்தைகள்.. நடிகை மேக்னா ராஜ் உணர்ச்சிபூர்வமான பதிவு

 

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆங்கிலம், சைனீஸ், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 48,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். எஸ்.ஜானகி சினிமா துறையில் 1957 ஆம் ஆண்டில் ‘விதியின் விளையாட்டு’ என்ற தமிழ் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக தனது கலைப்பயணத்தை தொடங்கினார். வயது மூப்பின் காரணமாக 2018 ஆம் ஆண்டுடன் பாடல்கள் பாடுவதை ஜானகி நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது உடல்நிலை சிரியில்லாமல் அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி வதந்தி என்றும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் அவருடைய மகன் தற்போது கூறியுள்ளார். மேலும் தனது தாயாரின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.