சந்தியா ராகம் அப்டேட்: ஜானகியை ஷாப்பிங் கூட்டி போய் மாயா கொடுத்த அதிர்ச்சி.. நடந்தது என்ன?

Sandhya Raagam Today's Episode Update: ‌ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் சந்தியா ராகம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 26, 2023, 11:33 AM IST
  • சந்தியா ராகம் : இன்றைய எபிசோட்.
  • சந்தோஷமடையும் மாயா.
  • சந்தியா ராகம்: சீரியலை எங்கு பார்ப்பது?
சந்தியா ராகம் அப்டேட்: ஜானகியை ஷாப்பிங் கூட்டி போய் மாயா கொடுத்த அதிர்ச்சி.. நடந்தது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சந்தியா ராகம்’ சீரியல்.

சந்தியா ராகம் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகியும் சந்தியாவும் கேன்சர் குறித்து பேச தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, இருவரும் மரணம் குறித்து பேசி கொண்டிருக்க திடீரென உள்ளே வரும் மாயா யாருக்கு என்னாச்சி? ஏன் இப்படி பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க சந்தியா ஊர்ல எங்க ரெண்டு பேருக்கும் பிரண்ட். அவங்கள பத்தி தான் பேசிட்டு இருந்தோம் என்று சொல்லி சமாளிக்கிறாள். 

சந்தோஷமடையும் மாயா

இதனை தொடர்ந்து மாயா இப்படியெல்லாம் பேசாதீங்க என்று சொல்லி வெளியே வர அவளது அப்பா ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து நிற்க சந்தோஷமடைகிறாள். அப்பாவை வீட்டிற்குள் அழைத்து வந்து மூன்று பேரும் ஷாப்பிங் போகலாம் என்று சொல்ல சந்தியா அவர் இப்போ தான் வந்திருக்காரு, அதுக்குள்ள என்ன ஷாப்பிங் என்று சொல்ல மாயா புரியுது புரியுது நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்க ஆசைப்படுறீங்க. சரி நான் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்கிறாள். 

அடுத்து இந்த லேடி இருக்காங்களே என்று ஜானகி பற்றி பேசி சரி ரெடியா இருங்க நான் வெளியே போகணும் என்று சொல்லி அவளை கூட்டி கொண்டு ஷாப்பிங் செல்கிறாள். மாயா ஜானகியை கண்டு கொள்ளாமல் கடை கடையாக அலைய ஜானகி அவள் பின்னாலே ஓடி வருகிறாள். மறுபக்கம் தனலட்சுமி தன்னுடைய தோழி பரணியுடன் சேர்ந்து உள்ளாடை வாங்க வந்து அதை எப்படி கேட்பது என தெரியாமல் தவிக்கிறாள். 

மேலும் படிக்க | Leo OTT Release Date: ஓடிடியில் லியோ படம்...எப்போது ரிலீஸ்?

கோவப்படும் மாயா

பிறகு ஜானகிக்கு போன் போட்டு நீ எப்பம்மா வருவ? அப்பா என்னை அடிச்சிட்டாரு என்று நடந்த விஷயங்களை சொல்லி கொண்டிருக்க ஜானகி சத்தமாக பேசுவதை பார்த்து மாயா எதுக்கு இப்படி கத்தி பேசிட்டு இருக்கீங்க என்று கோபப்படுகிறாள். பிறகு திரும்பவும் அவள் நடக்க தொடங்கி விட ஜானகி பின்னாடி ஓட தொடங்குகிறாள். 

அடுத்து ஜானகிக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து எதுக்கு நீங்க அமெரிக்கா வந்தீங்க? எங்க அம்மா கிட்ட பணம் வாங்கவா என்று கேட்க அதெல்லாம் எங்க கிட்டயே நிறைய இருக்கு நான் அவளை பார்க்க தான் வந்தேன் என்று ஜானகி பதில் சொல்கிறாள். நீங்க வந்ததில் இருந்து அவங்க அழுதுட்டே இருக்காங்க, எப்ப கிளம்பி போவீங்க என்று கேட்க ஜானகி அதிர்ச்சி அடைகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சந்தியா ராகம்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News