அரவிந்த சாமியின் சதுரங்க வேட்டை-2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சதுரங்க வேட்டை-2 படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 18, 2021, 06:01 PM IST
அரவிந்த சாமியின் சதுரங்க வேட்டை-2  படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! title=

2014-ம் ஆண்டு H.வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை படத்தை தொடர்ந்து சதுரங்க வேட்டை-2 எடுக்கப்பட்டது.  இதன் முதல் பாகத்தில் நடராஜன், இசாரா நாயர், பொன்வண்ணன், இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர்.  தற்போது இதன் இரண்டாம் பாகத்திற்கு  H.வினோத் கதை எழுத, நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.  இப்படத்தை மனோபாலா தயாரித்து இருக்கிறார்.  இப்படத்தில் அரவிந்த் சாமி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ், தீரச்சு இரத்தினம், சிறீமன், யோகி பாபு, சந்திரமௌலி மற்றும் கம்பம் சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.  இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.

ALSO READ | ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தளிக்க போகும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

இப்படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் நடிகர் அரவிந்த் சாமிக்கும், தயாரிப்பின் தரப்பிற்கும் இடையே சம்பள பாக்கி குறித்த பிரச்சனை வெடித்து அது வழக்காக மாறி நீதிமன்றம் வரை சென்றது.  

sv

இதுகுறித்து அரவிந்தசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அப்போது படத்தை வெளியிடாமல் தடுப்பது எனது நோக்கமன்று; சம்பள பாக்கியை பெற தான் நான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.  மேலும் அரவிந்தசாமி யாரோ ஒருவரால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்று மனோபாலா அவர் மீது குற்றம் சாட்டினார்.  அதனையடுத்து இவர்களது பிரச்சனை ஒருவழியாக தீர்க்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது இந்த நீண்ட இழுபறிக்கு பின்னர், கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பின்னர் "சதுரங்க வேட்டை-2" திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ | 'வலிமை' படத்தை தொடர்ந்து மீண்டும் கைகோர்க்கும் அஜித் - வினோத் கூட்டணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News