பிக்பாஸ் ஜூலியை ஏமாற்றிய காதலன்! இதுதானா காரணம்

பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி தன்னையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக தனது காதலர் மீது புகார் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2021, 01:54 PM IST
பிக்பாஸ் ஜூலியை ஏமாற்றிய காதலன்! இதுதானா காரணம் title=

ஜல்லிக் கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார் ஜூலி. அந்த புகழ் அவரை இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் செய்தது. இதன் பிறகு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியால் வேற லெவலில் பிரபலமானார். 

பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு வந்த பிறகு வீரத்தமிழச்சி பெயர் டோட்டலாக காலி ஆகி, அழுகினி ஜூலியாக (Julie) மாறிவிட்டார். பிக் பாஸிலிருந்து எலிமினேஷன் ஆனா பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கினார். பிறகு மாடலிங்கில் படு பிஸியாகிவிட்டார்.

ALSO READ | Photo Inside: என்ன ஜூலிக்கும் திருமணமா?

இதற்கிடையில் சின்னத்திரையில் பிக்பாஸ் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் அண்மைக்காலத்தில் பிரபலமானவர் நடிகை மரியா ஜூலி புனித தோமையர் மலை பகுதியில் வசித்து வருகிறார். இவர் அமைந்தகரை அய்யாவூ காலனி துரைசாமி தெருவில் வசித்து வரும் மணீஷ் என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.

மணீஷ் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாக மரியா ஜீலியிடம் கூறி பல்சர் இருசக்கர வாகனம், பிரிட்ஜ், மற்றும் இரண்டு சவரன் செயின் பணம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு, தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஜீலியிடமும் மணீஷ் காதலித்த போது எந்தெந்த பகுதிகளுக்கு ஜூலியை அழைத்துச் சென்றார், ஜூலியிடம் தவறாக நடந்து கொண்டாரா, ஜூலி பல ஆண் நண்பர்களோடு சமூக வலைதளங்களில் உள்ள தொடர்பு காரணமாக திருமணத்தை தவிர்த்தாரா, உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கடற்கரை மணலில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் ஜூலி!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News