17 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக பிரபல நடிகர், கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

பிக் பாஸ் மூலம் பிரபலமான டேனியல் ஆன்னி போப் இளம் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 19, 2021, 06:29 PM IST
17 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக பிரபல நடிகர், கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

டேனியல் ஆன்னி போப் தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றுள்ளார். மேலும் மசாலா கபே என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றினார்.

படங்களில் நடித்து வந்தாலும் டேனியலுக்கு பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி மூலம் தான் புகழ் கிடைத்தது. இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களில் சிறுமிகளை பாலியல் தொல்லை செய்து நள்ளிரவில் அவர்களின் புகைப்படங்களை கேட்பதாக பரப்பரப்பான புகார் ஒன்று எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Thonuchu Solliton என்ற கணக்கில் இருந்து டேனியல் ஒரு  17 வயது இளம்பெண்ணுடன் மோசமான முறையில் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், "எனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் எல்லாம் இந்த டேனியல் ஆன்னி போப் (Daniel Annie Pope) ரொம்ப கேவலமாக நடந்துகொண்டு பெண்களை ஹராஸ் செய்திருக்கிறார். டேனியுடன் வேலை செய்பவர்கள் கூட புகார் தெரிவித்துள்ளனர். அவர் சிறுமிகளை தான் குறி வைக்கிறார். பலருக்கு மெசேஜ் அனுப்பி வலை விரித்திருக்கிறார்." என்று கூறப்பட்டுள்ளது. 

ALSO READ | Video: பாடல் ஆசிரியராய் உருமாறிய பிக்பாஸ் பிரபலம்!

எனினும், பள்ளியில் படிக்கும் அந்த 17 இளம்பெண் புத்திசாலியாக டேனி கேட்ட விவரங்கள் எதையும் கொடுக்கவில்லை. டேனி அப்பென்ணிடம் அவரது புகைப்படங்களை அனுப்பும்படி, அதிகாலை 2 மணிக்கு இரு முறை கேட்டுள்ளார். அவர் எவ்வளவு காலமாக இப்படி செய்து வருகிறார் என்று தெரியவில்லை’ என்று அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து டேனி வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தன்னை பற்றி அவதூறு பரப்ப சிலர் இப்படி செய்கிறார்கள் என்றும், தன்னைப் பற்றி வலம் வரும் தவறான செய்திகளை நீக்கவில்லை என்றால் புகார் அளிக்கப்படும் என்றும் டேனி கூறியுள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News