தனது தாழ்மையான பதிலுடன் மீண்டும் இணையத்த்தில் டிரெண்டான சோனு சூத்

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் தங்கள் வீடுகளை அடைய சோனு சூட் அயராது உழைத்து வருகிறார்.

Last Updated : May 28, 2020, 02:41 PM IST
தனது தாழ்மையான பதிலுடன் மீண்டும் இணையத்த்தில் டிரெண்டான சோனு சூத் title=

ஒரு ட்வீட்டின் ஊடகம் மூலம்  சோனு சூத்-தை அமிதாப் பச்சனுடன் ஒப்பிடும் ரசிகருக்கு சோனு சூத் ஒரு காவிய மற்றும் தாழ்மையான முறையில் பதில் அளித்துள்ளார். தெரிந்துக்கொள்ள மேலும் படிக்கவும் .

சோனு சூத் தற்போது லட்ச கணக்கான இதயங்களை வென்று வருகிறார், அதுவும் அவரது நடிப்போ அல்லது திரைப்படங்கள் காரணமாக அல்ல, அவரது சிறந்த செயலுக்காக. கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவ நடிகர் சோனு சூத் தனது கரங்களை நீட்டியுள்ளார். மும்பையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சோனு பேருந்துகளை ஏற்பாடு செய்தார். அது மட்டுமல்லாமல், அத்தகையவர்களுக்கு உதவ ஒரு நடிகரான சோனு ஒரு ஹெல்ப்லைனையும் தொடங்கினார்.

திரைப்பட சகோதரத்துவ உறுப்பினர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சமூக ஊடகங்களில் தபாங் நடிகரைப் பாராட்டி வருகின்றனர். இத்தனைக்கும் இடையில், அவரை அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்ட ஒரு ரசிகருக்கு சோனுவின் தாழ்மையான மற்றும் காவிய பதில் மீண்டும் இணையத்தில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. மும்பைக்கு வரும் மக்கள் அவரைச் சந்திக்க அவரது முகவரியைக் கேட்பார்கள் என்பதால் எல்லாம் இயல்பு நிலைக்கு வரும்போது ஞாயிற்றுக்கிழமைகளில் சோனு விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும் என்று அவரது ரசிகர் ஒருவர் கூறினார். இதற்கு நடிகர் சோனு சூத் அதற்கு பதிலாக ஏராளமான ஆலு பொராட்டக்கள், வெற்றிலை மற்றும் தேநீர் ஆகியவை அவரின் வீட்டுக்கு வருவதாக கூறினார்.

 

 

சோனு சூத் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா அரசு பதவிகளில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று, அவர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்தார். முன்னதாக ஒரப பிரத்யேக அரட்டையில், COVID-19 நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் முன்வந்து உதவுமாறு நடிகர் வலியுறுத்தியிருந்தார்.

(மொழியாக்கம் – தெய்வ பிந்தியா)

Trending News