சுல்தான்: பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.200 கோடி தாண்டியது

Last Updated : Jul 11, 2016, 04:04 PM IST
சுல்தான்: பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.200 கோடி தாண்டியது title=

பாலிவுட் நடிகர் சல்மான் கான் - அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்' திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. திரைக்கு வந்து 5 நாட்கள் முடிவில் சுல்தான் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 181 கோடி வசூல் செய்ய உலகம் முழுவதும் ரூ 250 கோடியை தாண்டிவிட்டது. 7 நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் தூம் -3 , பஜ்ரங் பாய்ஜான் போன்ற படங்கள் வசூலித்ததை சுல்தான் படம் 6 நாட்களில் வசூலித்து சாதனை முறியடித்து உள்ளது.

இப்போது  ‘சுல்தான்’ படத்துக்கு பாகிஸ்தானிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத் துள்ள தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் 5 நாட்களில் மட்டும் ‘சுல்தான்’ படம் ரூ.15 கோடி வசூலித்து  சாதனை படைத்திருக்கிறது.

 

 

 

Trending News