சாமி தரிசனம் செய்த அஜித்!- தீயாகப் பரவும் வைரல் புகைப்படங்கள்!

நடிகர் அஜித், கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

Last Updated : Mar 31, 2022, 11:17 AM IST
  • அஜித் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள்
  • அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
  • அண்மையில் அஜித்- ஷாலினி புகைப்படம் வைரலானது
சாமி தரிசனம் செய்த அஜித்!- தீயாகப் பரவும் வைரல் புகைப்படங்கள்! title=

வலிமை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், ஹெச்.வினோத் இயக்கும் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளார். அவரது 61 ஆவது படமான இப்படத்துக்கு பின்னர் விக்னேஷ்  சிவனுடன் அவர் இணையவுள்ளார். 62ஆவது படமான இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

                                                              Ajith

அடுத்தடுத்த படங்களில் அஜித் பிஸியாக இருந்துவரும் நிலையில் கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகின்றன. கேரளாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு  இன்று அதிகாலையில் அஜித் சென்றிருந்ததாகவும் அப்போது அவர் தரிசனம் செய்த புகைப்படங்கள்தாம் இவை எனவும் சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க | அஜித்துக்கு சம்பளம் இத்தனை கோடியா?! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!

                                            Ajith 

நீண்ட தாடி, மீசையுடன் வெள்ளை நிற வேட்டி மற்றும் துண்டுடன் அஜித் காட்சியளிக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அஜித், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அஜித்தும் ஷாலினியும் இணைந்து தோன்றிய புகைப்படம் ஒன்று ட்ரெண்ட் அடித்தது.

                                                                           Ajith

இந்நிலையில் வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்களும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டுவருகின்றன.

மேலும் படிக்க | #AK62 அப்டேட்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News