இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான வலிமையைத் தொடர்ந்து மீண்டும் அவரது படத்திலேயே நடிக்கவுள்ளார் அஜித். அஜித்தின் 61ஆவது படமான இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் இரண்டு கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கேரக்டருக்காக சுமார் 25 கிலோ வரை தனது உடல் எடையை அவர் குறைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பரமசிவன், திருப்பதி படங்களின்போது காணப்பட்ட மாறுபட்ட அஜித்தை இப்படத்தில் காணலாம் என சொல்லப்படுவதால் ரசிகர்கள் புதிய தோற்றத்தைக் காண பெரும் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
வினோத்துடனான இந்தப் படத்தையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அஜித் இணைகிறார். அஜித்தின் 62ஆவது படமான இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் இப்படத்துக்காக நடிகர் அஜித்துக்கு வழங்கப்படவுள்ள சம்பளம் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது. அதாவது, இப்படத்துக்காக அஜித்துக்கு மட்டும் சம்பளமாக ரூ.100 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாம். இதில் அடுத்த ஆச்சர்யம் என்னவென்றால், அஜித் தரப்பு ரூ. 100 கோடி கேட்ட நிலையில் படத் தயாரிப்பு நிறுவனமோ கூடுதலாக ரூ.5 கோடி கொடுக்க முன்வந்துள்ளதாம்.
மேலும் படிக்க | 'விஜய்' படத்தைத் தட்டித் தூக்கிய அனிருத்! - #Exclusive!
படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் செய்வதே முன்பெல்லாம் பெரிய விஷயமாக பேசப்பட்டது. ஆனால் தற்போது மீடியம் பட்ஜெட் மற்றும் நடுத்தர ஹீரோக்களின் படங்களே 100 கோடி ரூபாய் கலெக்சன் ஈட்டுவது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இந்த நிலையில் டாப் நடிகர்களுள் ஒருவரான அஜித்தின் படம் முதலுக்கு மோசம் ஏற்படுத்தாது எனும் காரணத்தால் இந்தப் பெரும் தொகை கொடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஜித்தின் சம்பளமே 100 கோடியைத் தாண்டும் பட்சத்தில் படத்தின் மொத்த பட்ஜெட் பல கோடி ரூபாயைத் தாண்டும். அந்த வகையில் அஜித்தின் கரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகத்தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR