தளபதி விஜய்யின் மாஸ்டர் டயலாக் promo வெளியானது... master ஆகும் dialogue

தளபதி விஜய் தற்போது தனது வரவிருக்கும் படமான மாஸ்டர் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார், தமிழில் ஜனவரி 13 மற்றும் இந்தியில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது. 2021 இல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது மாஸ்டர் திரைப்படம். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 6, 2021, 08:49 PM IST
  • தளபதி விஜய்யின் மாஸ்டர் டயலாக் promo வெளியானது...
  • வைரலாகிறது தளபதியின் வசனம்
  • ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாகிறது மாஸ்டர்
தளபதி விஜய்யின் மாஸ்டர் டயலாக் promo வெளியானது... master ஆகும் dialogue  title=

தளபதி விஜய் தற்போது தனது வரவிருக்கும் படமான மாஸ்டர் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார், தமிழில் ஜனவரி 13 மற்றும் இந்தியில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது. 2021 இல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது மாஸ்டர் திரைப்படம். 

தளபதி விஜய் (Vijay) நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கிய உள்ள திரைப்படம் மாஸ்டர் (Master). விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் டயலாக் ப்ரமோ இன்று வெளியானது.

இதற்கு முன்னதாக தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. மாஸ்டர் (Master) படத்தின் டீசர் 5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தில் விஜய் (Vijay) கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஷாந்தனு,"கைதி" பட புகழ் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Also Read | இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு - ஆனால் ...

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது. இதனால் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விஜய் நடித்த மாஸ்டர் படமானது திரையரங்கில் மட்டுமே வெளியாகிறது.  

இந்நிலையில்  'மாஸ்டர்' (Master) படத்தின் டயலாக் ப்ரமோ இன்று மாலை வெளியானது.  தற்போது வரை 'மாஸ்டர்' டீசர் யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்திலும், அதிக  லைக்குகளையும் பெற்று சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read | தளபதி விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News