ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லட்சுமி-யின் மொராக்கா சிங்கிள்!!

அதிக வரவேற்ப்பை பெற்ற லட்சுமி திரைப்படத்தின் மொராக்கா சிங்கிள் டிராக் வீடியோ!

Last Updated : Jun 28, 2018, 01:33 PM IST
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லட்சுமி-யின் மொராக்கா சிங்கிள்!! title=

அதிக வரவேற்ப்பை பெற்ற லட்சுமி திரைப்படத்தின் மொராக்கா சிங்கிள் டிராக் வீடியோ!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லட்சுமி திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படம் நடன அடிப்படையிலான படம் என்று தெரிகிறது. பிரபுதேவாவின் எ.பி.சி.டி. திரைப்படம் போல் இதுவும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்கின்றனர்.

இதில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார், மேலும் ‘சூப்பர் டான்ஸர் 2016’ ரியாலிட்டி ஷோ வின்னர் தித்யா இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், மொத்தம் 12 பாடல்களை வைத்துள்ளனராம். இசை மற்றும் நடனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சூப்பர் ஹிட் மெட்டுக்களை போட்டு அசத்தியிருக்கிறாராம் இசையமைப் பாளர் சாம் சி.எஸ். 

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிரமோத் ஃபிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட 2 டீசர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இந்தப் படத்தின் ’மொராக்கா…’ (Morrakka) என்கிற சிங்கிள் டிராக்கை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இப்பாடல் வெளிவந்த வேகத்தில் சில மணி நேரங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று செம லைக்ஸ் குவித்து வருகிறது.

 

Trending News