ஜான் ஆபிரகாம் நடித்துள்ள 'வேதா' படத்திலிருந்து நீதானே நீதானே பாடல் வெளியீடு

ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இணைந்து நடனமாடிய இதயத்தைத் தொடும் பாடலான 'நீதானே நீதானே...' என்ற பாடல் 'வேதா'வில் இருந்து இப்போது வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 12, 2024, 12:38 PM IST
  • பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது.
  • தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும்.
  • ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர்.
ஜான் ஆபிரகாம் நடித்துள்ள 'வேதா' படத்திலிருந்து நீதானே நீதானே பாடல் வெளியீடு title=

ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் 'வேதா' படத்தில் இருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, ‘நீதானே நீதானே’ வெளியாகியுள்ளது. 'ஹோலியான்' மற்றும் 'மம்மி ஜி' ஆகிய இரண்டு எனர்ஜிட்டிக் பாடல்களுக்குப் பிறகு, இந்த அழகான பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். 

இந்தப் பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும். அதேசமயம், பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது. 

பாடலை வெளியிட்ட ஜான் ஆபிரகாம், "'நீதானே நீதானே...' பாடல் 'வேதா' படத்தின் ஆன்மா என் கதாபாத்திரத்தின் எமோஷனல் மற்றும் ரொமாண்டிக் பக்கத்தை இது காட்டும். இந்தப் படத்தில் வெறும் ஆக்‌ஷன் மட்டுமல்லாது காதலும் உண்டு என்பதற்காகதான் இந்தப் பாடல்" என்றார். 

மேலும் படிக்க | OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

தமன்னா பாட்டியா பகிர்ந்துகொண்டதாவது, “ஜானுடன் முதல்முறையாக பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தனது கதாபாத்திரத்திற்குக் கொடுத்த அர்ப்பணிப்பு திரையில் சிறப்பாக வந்துள்ளது. இந்த பாடல் காதல் மற்றும் பல நல்ல நினைவுகள் நிறைந்ததாக இருக்கும். இது அனைவருக்கும் கனெக்ட் ஆகும் என நான் நம்புகிறேன்!” என்றார். 

இது குறித்து பாடலின் இசையமைப்பாளர் அமல் மாலிக் கூறுகையில், "இந்த காதல் மெல்லிசை 'நீதானே நீதானே...' நிச்சயம் ரசிகர்களின் இதயங்களை ஊடுருவும். இது பாடல் என்பதையும் தாண்டி, நான் அனுபவித்த காதலை இந்தப் பாடலில் முழுமையாகக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார்.

'நீதானே நீதானே...' பாடலுக்கு அமல் மாலிக் இசையமைத்துள்ளார். குணால் வர்மா பாடல் வரிகளுக்கு அர்ஜித் சிங் பாடியுள்ளார். 

நிகில் அத்வானி இயக்கி இருக்க, அசீம் அரோரா எழுதிய ‘வேதா’ படத்தை ஜீ ஸ்டுடியோஸ், உமேஷ் கேஆர் பன்சால், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, ஜான் ஆபிரகாம் மற்றும் மீனாக்ஷி தாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். 

ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பான ‘வேதா’ படத்தின் முன்பதிவு தொடங்கியது! ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

மேலும் படிக்க | August Releases : ஒரே மாதத்தில் ஒட்டுமொத்தமாக வெளியாகும் 10 புதுப்படங்கள்! முழு லிஸ்ட்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News