‘வில்லனாக நடிக்க போவதில்லை’ பிரபல ஹீரோவால் அதிர்ச்சி முடிவை எடுத்த விஜய் சேதுபதி!

Vijay Sethupathi: நடிகர் விஜய் சேதுபதி இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Nov 30, 2023, 07:43 PM IST
  • விஜய் சேதுபதி, கடைசியாக ஜவான் படத்தில் வில்லனாக வந்தார்.
  • இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்.
  • இந்த அறிவிப்பிற்கான காரணம் என்ன?
‘வில்லனாக நடிக்க போவதில்லை’ பிரபல ஹீரோவால் அதிர்ச்சி முடிவை எடுத்த விஜய் சேதுபதி! title=

தமிழ் திரையுலகை தாண்டி, பாலிவுட் வரை சென்றுள்ள நடிகர் விஜய் சேதுபதி இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். 

விஜய் சேதுபதி..

தமிழ் சினிமா ஹீரோக்களுள், எந்த சினிமா பின்புலமும் இன்றி திரையுலகில் சாதித்தவர்கள் வெகு சிலரே உள்ளனர். அப்படி சாதித்த வெகு சிலர்களுள் ஒருவர், விஜய் சேதுபதி. தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில், துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து அவர் நடித்து கொடுத்த அனைத்து படங்களுமே இவர் பெயர் கூறும் படங்களாகவே இருந்தன. புதுக்கோட்டை படத்தில் வில்லன்களுக்கு கையாளாக வந்த இவர், சமீபத்தில் பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கானிற்கே வில்லனாக நடித்தார். 

விஜய் சேதுபதியின் வில்லன் அவதாரம்..

நடிகர் விஜய் சேதுபதி, வழக்கமாக சாதுவான பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாப்பாத்திரங்களில்தான் ஹீராேவாக நடித்து வந்தார். திடீரென்று, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘பவானி’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் இவருக்கு நன்றாக செட் ஆக, தொடர்ந்து வந்த வாய்ப்புகள் அனைத்தும் வில்லன் கதாப்பாத்திரங்களாகவே இருந்தன. இவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் தனது வில்லன் பயணத்தை அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியிருந்த ‘ஜவான்’ படத்திலும் விஜய் சேதுபதி ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்தார். படம் ஹிட் ஆனது, கூடவே விஜய் சேதுபதியும் உலக அளவில் பலரால் அறியப்பட்டார். 

“வில்லனாக நடிக்க மாட்டேன்..”

நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது, தான் இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை என்று கூறினார். பின்பு அதற்கான காரணத்தையும் விளக்கினார். வில்லனாக நடிப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது என பேசிய அவர், ஒரு சில படங்களில் ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதால்தான் வில்லனாக நடித்ததாகவும் கூறினார். மேலும், வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தால் நிறைய பாகுபாடுகள் பார்க்கப்படுவதாகவும், ஹீரோ கதாப்பாத்திரத்தை விட வில்லன் கதாப்பாத்திரம் நன்றாக வந்துவிடக்கூடாது என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். தான் வில்லனாக நடித்த சில காட்சிகள் சில படங்களில் இருந்து எடிட் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை என தீர்க்கமாக கூறியுள்ளார் விஜய் சேதுபதி. 

மேலும் படிக்க | கேரளாவில் சக்கைபோடு போட்ட ‘லியோ’! மொத்த கலக்ஷன் எவ்வளவு தெரியுமா?

‘இந்த’ ஹீரோதான் காரணமா..? 

விஜய் சேதுபதி கடைசியாக ஷாருக்கான் ஹீரோவாக நடித்த ஜவான் படத்தில்தான் வில்லனாக வந்தார். ஷாருக்கான் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு பிடித்த பாலிவுட் ஸ்டார் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் அப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்ததது. இதனால், ஷாருக்கானால்தான் தற்போது விஜய் சேதுபதி இந்த முடிவிற்கு வந்திருக்கிறாரோ என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். 

விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள்..

விஜய் சேதுபதி தன் கைவசம் இப்போது பல படங்களை வைத்துள்ளார். ஒரு பக்கம் அவர் ஹீரோவாக நடித்துள்ள மெரி கிரிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் பணிகள் ஆரம்பித்துள்ளன. இன்னொரு பக்கம் விடுதலை பாகம் 2படத்திலும் நடித்து வருகிறார். காந்தி டாஸ்க், மகாராஜா ஆகிய படங்களும் இவரது நடிப்பில் உருவாகி வருகின்றன. இவர் ஒரு பக்கம் பிசியாக நடிக்க, இவரது மகன் சூர்யா ஃபீனிக்ஸ் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். 

மேலும் படிக்க | ஓடிடியில் ரிலீஸான புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News