விஜயுடன் 3வது முறையாக மோதும் சிம்பு..! பீஸ்ட் VS வெந்து தணிந்தது காடு

இளைய தளபதி விஜய் மற்றும் நடிகர் சிம்புவின் திரைப்படங்கள் 3வது முறையாக ஒரே நாளில் ரிலீஸாகும் சூழல் உருவாகியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 23, 2022, 01:24 PM IST
  • ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் வெந்து தணிந்தது காடு
  • பீஸ்ட் திரைப்படமும் ஏப்ரலில் ரிலிஸாகும் என அறிவிப்பு
  • ஒரே நாளில் சிம்பு - விஜய் படங்கள் ரிலீஸா?
விஜயுடன் 3வது முறையாக மோதும் சிம்பு..! பீஸ்ட் VS வெந்து தணிந்தது காடு title=

மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு படு பிஸியாகிவிட்டார் சிம்பு. கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’, கோகுல் இயக்கத்தில் ’கொரோனா குமார்’, இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சில படங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ | நடிகர் சிம்பு - நிதி அகர்வால் விரைவில் திருமணம்?

வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் சிம்பு முழு மூச்சாக நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் இறுதிக் கட்ட சூட்டிங் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் செட் அமைக்கப்பட்டு சிம்புவின் காதல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. முத்துவாக நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக சித்திட்ஞானி நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது. ஏற்கனவே சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படமும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இளையதளபதி விஜய் - இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது, சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படமும் ஏப்ரல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுகிறதா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விஜய் மற்றும் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி - போடா போடி, மாஸ்டர் - ஈஸ்வரன் ஆகிய படங்கள் ஒரு நாளில் வெளியாகியிருகின்றன. இப்போது பீஸ்ட் மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், தியேட்டரில் 3வது முறையாக சிம்பு மற்றும் விஜய் படங்கள் மோதவுள்ளன. 

ALSO READ | தமிழகத்தில் மாஸ்டர் தான் முதலிடம் - திரையரங்கு உரிமையாளர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News