Japan Update: கார்த்தி ரசிகர்களுக்கு ட்ரீட்..4 ஹீரோக்கள் சேர்ந்து வெளியிட்ட ‘ஜப்பான்’ இண்ட்ரோ வீடியோ..!

Japan Intro Video: கார்த்தியின் நடிப்பில் தயாராகியுள்ள ஜப்பான் படத்தின் ப்ரமோ வீடியோவை 4 முன்னணி ஹீரோக்கள் இணைந்து வெளியிட்டனர்.   

Written by - Yuvashree | Last Updated : Jun 5, 2023, 10:02 AM IST
  • ஜப்பான் படத்தின் இண்ட்ரோ வீடியோ வெளியீடு.
  • கார்த்தியின் பிறந்தநாளையொட்டி இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
  • நான்கு ஹீரோக்கள் இணைந்து இந்த வீடியோவை ஒவ்வொரு மொழியில் வெளியிட்டுள்ளனர்.
Japan Update: கார்த்தி ரசிகர்களுக்கு ட்ரீட்..4 ஹீரோக்கள் சேர்ந்து வெளியிட்ட ‘ஜப்பான்’  இண்ட்ரோ வீடியோ..! title=

கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள ஜப்பான் பட ப்ரமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. 

டீசர் வெளியீடு:

கார்த்தி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் ஜப்பான் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜப்பான் படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதனை தமிழில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். 

சிம்புவை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்திலும் ரிஷப் ஷெட்டி கன்னடத்திலும் விஜய் தேவரக்கொண்டா தெலுங்கு மொழியிலும் படத்தின் இண்ட்ரோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். 

கார்த்தி பிறந்தநாள் ட்ரீட்!

நடிகர் கார்த்தி இன்று தனது  பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, படக்குழு ஜப்பான் படத்தின் இண்ட்ரோ வீடியோவை நாளை வெளியிடுவதாக நேற்று மாலை அறிவித்திருந்தது. இது குறித்து அவர்கள் வெளியிட்டிருந்த போஸ்டரில், “யார் அந்த ஜப்பான்?” என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இதையொடி, முன்னர் கூறியது போலவே இன்று படத்தின் ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

யார் அந்த ஜப்பான்?

டீசரின் ஆரம்ப காட்சியில் நடிகர் வைகை சந்திரசேகர், “அவன் பாவ மன்னிப்புகளுக்கெல்லாம் அப்பார்பட்டவன். அவன் ஒரு அதிசய பிறவி..” என்று ஜப்பான் கதாப்பாத்திரம் குறித்து ஒரு பாதிரியாரிடத்தில் சொல்கிறார். இன்னொரு காட்சியில், ஒருவர் “அவன் வெரி டர்டி வில்லன்..” என்கிறார். கடைசியில் அடியாட்கள் சிலர் கார்த்தியை பார்த்து “யார்ரா நீ..” என்று கேட்க அதற்கு அவர் “ஜப்பான்..மேட் இன் இந்தியா..” என கூலாக சொல்கிறார். கையில் துப்பாக்கியுடனும் தலையில் வித்தியாசமான விக்குடனும் பற்களில் கரையுடனும் முழுக்க முழுக்க புதிய தோற்றத்தில் இருக்கிறார் கார்த்தி. 

தீபாவளி ரிலீஸ்:

ஜப்பான் திரைப்படம் இந்த தீபாவளிக்கு ரிலீஸாகும் என ரசிகர்கள் முன்னரே யூகித்தனர். இதைத்தொடர்ந்து, படக்குழுவும் ரிலீஸ் குறித்த தகவலை உறுதிப்படுத்தியது. இந்த வருட தீபாவளிக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் பல படங்கள் வெளியாகவுள்ளன. நீண்ட நாட்களாக ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் தீபாவளிக்குத்தான் வெளியாகிறது. கடைசியாக சர்தார் மற்றும் டான் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யப்பட்டன. டான் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. சர்தார் படம் குறைவான அளவே வரவேற்பினை பெற்றது. இந்த படங்கள் மட்டுமன்றி, கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஜிகிர்தண்டா 2, கேப்டன் மில்லர் ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகின்றன. ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படமும் தீபாவளிக்கு வெளியாகும் என பேசப்படுகிறது. இந்த தீபாவளி ரிலீச் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஜப்பான் படக்குழு:

ஜப்பான் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ‘எங்க வீட்டு பிள்ளை’ ஹீரோயின் அனு இமானுவேல் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் தயாராகியுள்ளன. டீசரில் இடம் பெற்றிருந்த பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படம், கொள்ளையடிக்கும் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி திருடனாக நடித்திருக்கிறாரே ஒழிய திருட்டு கும்பலின் தலைவனாக நடித்ததில்லை. ஆகையால், இப்படம் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Karthi Birthday: ரக்கட் பாய் பருத்திவீரன் டூ சாக்லேட் பாய் வந்தியத்தேவன்-கார்த்திக்கு ஏற்றம் கொடுத்த கதாப்பாத்திரங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News