‘விவேகம்’ படத்தை விநியோகஸ்தர்கள் கைப்பற்ற கடும் போட்டி

Last Updated : May 17, 2017, 01:19 PM IST
‘விவேகம்’ படத்தை விநியோகஸ்தர்கள் கைப்பற்ற கடும் போட்டி  title=

‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற தமிழகத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தற்போது ‘விவேகம்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘விவேகம்’  படத்தின் டீஸர் இணையத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியதோடு, மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் விநியோக உரிமையை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதாவது 5 கோடி முதலீட்டுக்கு மேல் உள்ள படங்களைத் தனித்தனியாக தான் விநியோக உரிமையை விற்க வேண்டும். ஒட்டுமொத்தமாக தமிழக உரிமையை விற்கக் கூடாது என்று விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இதனால் ‘விவேகம்’ படத்தின் விநியோக உரிமையை தனித்தனியாக விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் ஏரியா உரிமையை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நயகனகாவும் நடித்து வரும் இந்தப்படத்தில், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிகின்றன.

ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Trending News