மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இதையடுத்து அவர் தொடர்ந்து, தாண்டவம், தங்க மகன், தெறி என பல படங்களில் நடித்து தனக்கென தமிழ் திரையுலகில் தனி இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவில மட்டுமின்றி இந்தியிலும் இவர் நடித்து வருகிறார்.
எமி ஜாக்சன் இந்தியில் ஏக் தீவானா தா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபகாலமாக லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவருடன் ஒன்றாகச் சுற்றி வருவதாகக் கூறப்பட்டது. மேலும் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு இணைந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள '2.0' படம் இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் Bafta 2018-ம் ஆண்டின் விருது விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தான் அணிந்த உடையை வீடியோ எடுத்து அதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு செய்துள்ளார். அந்த வீடியோவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய உடையின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வெள்ளை நிறத்தில் விலையுயந்த அந்த உடையில் நடிகை எமி ஜாக்சன் தேவதையை போன்று காணபடுகிறாராம்.
இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....!
En route to the screening of Boogie Man pic.twitter.com/N5bQOqlG5w
— Amy Jackson (@iamAmyJackson) March 24, 2018