ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உச்சத்தை எட்டியுள்ள ஆப்பிள் நிறுவனம் தற்போது அதன் மற்றொரு தயாரிப்பான ஸ்மார்ட்வாட்ச்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்தாலும் புது புது அம்சங்களை கொடுக்க ஆப்பிள் தவறவில்லை.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். தனது வித்தியசமான நடிப்பின் முலம் அனைத்து மொழி மக்களின் மனதை கவர்ந்தவர்.
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து, தாண்டவம், தங்க மகன், தெறி என நடித்த இவர், இந்தியிலும் நடித்து வருகிறார்.
கடந்த 2002-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘சார்லி சாப்ளின்’. தற்போது இப்படத்தின் இரண்டாம் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா என பலர் நடிக்கின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டில் கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார். அந்த அகாடமிக்கு எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படை விமானங்கள் லக்னோ - ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று இறங்கியது. 20 விமானங்கள் நெடுஞ்சாலையில் தரை இறங்குகின்றன.
லக்னோ - ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படையினர் போர் விமானங்களை தரையிறக்கம் செய்து சோதனை நடைபெற்று வருகிறது. அவசர காலங்களில் நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களை தரையிறக்கம் செய்வது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையின் முதல் கட்டமாக 16 இந்திய விமானப்படையினர் போர் விமானங்கள் தரையிறக்கம் செய்யப்பட்டது. லக்னோ - ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படையினர் போர் விமானங்களை தரையிறக்கம் செய்து சோதனை வீடியோ:-
அப்பா டோனிக்கு மகள் ஸிவா தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி. போட்டிகள் இல்லாத நேரத்தில் இவர் தனது மகளுடன் நேரத்தை செலவழிக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் அவர் ஷேர் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பயிற்சி ஆட்டத்துக்குப் பின் கொடுக்கப்பட்ட இடைவெளியில் அவரது மகள் ஸிவா மைதானத்திற்கு வந்து அப்பாவுக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது. ஈக்வெடார் அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் 3-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று, உலக கோப்பை வாய்ப்பை பிடித்தது.
ஆட்டம் தொடங்கி 20 நிமிடங்களில், அசத்தலாக 2 கோல்களைப் போட்டார் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி. பின்னர் 3-1 என்ற கோல் கணக்கில் ஈக்குவாடர் அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா. மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோல், அர்ஜென்டினா அணியை உலகக்கோப்பையில் தகுதிபெற வைத்தது.
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல் வீடியோ:-
தாய் தனது குழந்தைக்கு மிருகத்தனமாக பாடம் சொல்லிக் கொடுப்பதும் அதற்கு அந்த குழந்தை பயந்து கதறும் வீடியோவை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கண்டனம் தெரவித்துள்ளார்.
அந்த விடியோவில் ஒரு பெண் குழந்தைக்கு அவரது தாய் கணக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் போது மிக கொடூரமாக நடந்து கொள்கிறார்.
தாயின் மிரட்டலுக்குப் பயந்து அந்த குழந்தை கெஞ்சி அழுகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.