நினைத்தேன் வந்தாய்: தப்பித்த சுடர்... டார்ச்சர் செய்து தவிக்க விடும் குழந்தைகள்!

Ninaithen Vandhai Zee Tamil Serial: திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து அப்டேட்டை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 19, 2024, 02:01 PM IST
  • எழிலை பார்த்து சுடர் ஓடி ஒளிந்தாள் - கடந்த வார எபிசோட்
  • ராமையாவிடம் தனது கதையை சுட சொல்கிறாள்.
  • குழந்தைகள் சுடரை காரணமின்றி கலாய்த்து தள்ளுகின்றனர்.
நினைத்தேன் வந்தாய்: தப்பித்த சுடர்... டார்ச்சர் செய்து தவிக்க விடும் குழந்தைகள்! title=

Ninaithen Vandhai Zee Tamil Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், நினைத்தேன் வந்தாய்.

சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோட்டில் காபி எடுத்து வந்த சுடர் எழிலை பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடி ஒளிந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்று குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது, அதுகுறித்து இதில் தெரிந்துகொள்ளலாம். 

ராமையாவிடம் கதையை சொல்லும் சுடர்

அதாவது சுடர் ஓடி ஒளிவதை பார்த்த ராமையா, 'ஏன் என்னாச்சு' என்று கேட்க சுடர் எழிலை பாட்டிலால் அடித்த கதையை சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சி ஆகிறார். 'இப்பவே போய் ஐயா கிட்ட சொல்றேன்' என்று ராமையா உள்ளே செல்ல தடுத்து நிறுத்தும் சுடர் தன்னுடைய கதையை சொல்ல அதைக் கேட்டு ராமையாவின் மனம் மாறுகிறது.

மேலும் படிக்க | இது எனக்கு மறக்க முடியாத நாள்! நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்!

'சரி, உனக்காக நான் ஐயா கிட்ட பேசுறேன். அவர் கண்டிப்பா வேலையில் இருந்து அனுப்ப மாட்டாரு. நீ போய் ஒழுங்கா வேலைய பாரு' என்று அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக சுடர் வந்து குழந்தைகளை எழுப்ப அவர்கள் கோபப்படுகின்றனர். 

சுடரை கிண்டல் அடிக்கும் குழந்தைகள்

ஆளாளுக்கு சுடரை போட்டு கலாய்த்து கிண்டல் அடிக்கின்றனர். சுடர் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி குளிக்க கூட்டிச் சென்று குளிக்க வைக்கிறாள். அதன் பிறகு கனகவல்லி எல்லோரையும் சாப்பிட கூப்பிட சுடர் குழந்தைகளை கூப்பிட ஓவரா ஆக்டிங் பண்ணாத எல்லாம் எங்களுக்கும் காது கேட்கும் என்று பதிலடி கொடுக்கின்றனர்.

அடுத்ததாக அஞ்சலி, 'என்ன ஹாப்பியா இருக்க மாதிரி இருக்கு' என்று கேட்க சுடர், 'இல்ல நான் டல்லா தான் இருக்கேன்' என்று சொல்ல 'எங்களுக்கும் அதான் வேணும். தினமும் இப்படி இருந்தா தான் உன் மூஞ்சி நல்லா இருக்கு' என்று சொல்லி கீழே வருகின்றனர்.

சுடரை கட்டாயப்படுத்தும் ராமையா...

பிறகு கனகவல்லி ராமையாவிடம், 'அந்த பொண்ணையும் கூப்பிடு சாப்பிடட்டும், எழிலுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கணும்' என்று சொல்ல சுடர் அதிர்ச்சி அடைந்து ஒளிகிறாள். ராமையா, 'எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்' என்று வர மறுக்கும் சுடரை வலுக்கட்டாயமாக கூட்டி வருகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய 'நினைத்தேன் வந்தாய்' சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: பிரச்சனைக்கு மேல் பிரச்சனை.. தீபாவின் கச்சேரியில் கார்த்தி செய்தது என்ன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News