சீதாவை தோற்கடிக்க சூழ்ச்சி-மீண்டும் எண்ட்ரி கொடுத்த விஷால்! சீதாராமன் எபிசோட் அப்டேட்..

Seetha Raman Episode Update : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இதில் இன்று நடைபெற உள்ள நிகழ்வுகள் என்ன?   

Written by - Yuvashree | Last Updated : Mar 4, 2024, 12:24 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர், சீதா ராமன்
  • இத்தொடரை தினமும் மாலை 6 மணிக்கு பார்க்கலாம்
  • இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன?
சீதாவை தோற்கடிக்க சூழ்ச்சி-மீண்டும் எண்ட்ரி கொடுத்த விஷால்! சீதாராமன் எபிசோட் அப்டேட்.. title=

Seetha Raman Episode Update Today : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்

இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சீதாவுக்கு நன்றி மீது சந்தேகம் வர நான்சி மகா போட்டோ முன்பு நின்று இன்னொரு முறை அந்த சீதாவை ஜெயிக்க விடமாட்டேன் என்று சொன்ன நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சேதுவின் கவர்மெண்ட் கம்பெனியில் ஆர்டர் கொடுத்திருந்தவர்கள் சிலர் வீட்டிற்கு வந்து மகா இருக்கும்போது ஆர்டர் கொடுத்திருந்தோம். அவங்க இருந்திருந்தால முடிச்சு கொடுத்திருப்பாங்க உங்களுக்கு ஒரு வாரம் டைம் தரும் அதுக்குள்ள நீங்க ஆர்டர் முடிச்சு கொடுக்கணும் இல்லனா உங்க கம்பெனி மேல கேஸ் போடுவோம் என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்கின்றனர்.

மேலும் படிக்க | முத்துப்பாண்டிக்கு வார்னிங் கொடுத்த டிஎஸ்பி - அண்ணா சீரியல் அப்டேட்!

Sita Raman

இதனால் செய்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க சீதா என்னாச்சு என்று கேட்டு டைலர்களிடம் நீங்க பேசுங்க நீங்க கூப்பிட்டா கண்டிப்பா வந்து வேலை பண்ணுவாங்க என்று கூறுகிறார். சேதுவும் எல்லோரிடமும் பேச அவர்கள் வருவதாக சொல்லி கடைசி நேரத்தில் கை விரித்து விடுகின்றனர். 

இந்த விஷயம் அறிந்த சீதா இதெல்லாம் நான்சி வேலையா இருக்கும் என சந்தேகப்பட்டு இதற்கு தீர்வு காண முடிவெடுக்கிறாள். அதைத்தொடர்ந்து நான்ஸி விஷாலை சந்தித்து பேச அவன் நீங்க எதுக்கு மகாவை கொன்னுட்டு நான்ஸியா வந்திருக்கீங்க என்று கேள்வி கேட்க அதற்கு நான்ஸி பதில் சொல்ல மறுக்கிறாள். 

Sita Raman

பிறகு இந்த சீதாவை தோற்கடிக்கணும் இன்னொரு முறை அவள ஜெயிக்க விடக்கூடாது அதுக்கு உன்னுடைய உதவி தேவை என்று கேட்க நான் ஜெயிலுக்கு போக காரணமும் அந்த சீதா தான் அவளை பழிவாங்க நான் ரெடி என நான்ஸியோடு கூட்டு சேர்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சந்தியா ராகம்: சடங்கு செய்ய முடிவெடுத்த குடும்பம்.. மாயா கொடுத்த அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News